Sunday, May 25, 2014

12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்!

12 raasi

 

மேஷம்:  மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !

ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்
வந்தே ஸிவாத் மஜம்

ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

மிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

கடகம்: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

கன்னி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

துலாம்: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

விருச்சிகம்: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்
.

தனுசு: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

மகரம்: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

மீனம்: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

முதுகு வலிக்கு எளிய நிவாரணம் - அக்குபஞ்சர்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பது, அதிக தூரம் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது, எடை அதிகமான பொருட்களை அடிக்கடி தூக்குவது என இப்படிப்பட்ட வேலைகளால் பலருக்கும்.. இப்படி எதுவும் செய்யாமலே கூடவும் இப்போதெல்லாம் இடுப்பு வலி (lower back pain), குறுக்கு வலி, கீல்வாதம் (Sciatica ) போன்ற வலிகள் மனிதனின் அன்றாட வாழ்வில் பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது. .மேற்சொன்ன காரணங்கள் எதுவுமே இல்லாமல் சிலருக்கு எப்போதும் இந்த வலியால் பாதிக்கப்டுவர். பொதுவாக இப்போது இந்த வலியால் அவதிப்படாதவர்களே யாருமே இல்லை எனலாம்.

இதற்கு தீர்வாக அனைவரும் வீட்டிலையே செய்து கொள்ள எளிமையான வழி ஒன்றை படத்துடன் விளக்கியுள்ளேன். பயமும் இல்லை..பக்க விளைவுகளும் இல்லை. முயற்சி செய்து தான் பாருங்களேன்...

சமமான தரையில் படுத்துக் கொண்டு, இடுப்பின் கீழ் பகுதியில் (lower back) இரண்டு கை விரல்களையும் இறுக மூடி மடித்து ஒரு நிமிடத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பக்கமாக ஒருக்களித்து நம்முடைய மூடிய கையை (அ) டென்னிஸ் பந்தை படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் வைத்து பத்து நிமிடங்கள் அமைதியாக கண்ணை மூடி மூச்சை மெதுவாக இழுத்து விட வேண்டும். அதன் பிறகு அடுத்த பக்கமாக ஒருக்களித்து படுத்து முன்பு செய்தது போலவே செய்யவும் (இடது மற்றும் வலது புறம் மாறி மாறி ) இப்படி செய்தால் உடனே வலியில் இருந்து மீள முடியும். நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் இதனுடன் மேலும் சில புள்ளிகளை நம் கையால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Monday, May 19, 2014

கோமியத்தில் உள்ள சத்துக்கள்

பசுவானது புனித விலங்காக போற்றப்படுகிறது. பசுவின் சிறுநீரில் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதன் காரணமாகவே வீடுகளில் கிருமிகள் அண்டாமல் பாதுகாக்க அடிக்கடி பசுவின் சிறுநீர் தெளிக்கின்றனர் முன்னோர்கள். மனிதர்களின் பல நோய்களை நீக்கும் மருந்தாக பசு கோமியம் செயல்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கோமியத்தில் உள்ள சத்துக்கள்

பசுவின் சிறுநீரில் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி, டி, இ போன்றவை அடங்கியுள்ளன. தாது உப்புக்களும், லாக்டோஸ், என்ஸைம் போன்றவை காணப்படுகின்றன. மேலும் நைட்ரஜன், சல்ஃபர், பாஸ்பேட், சோடியம், மாங்கனீஸ், சிலிகான், குளோரின், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. கார்பாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஆகியவையும் இதில் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது....

நீரிழிவுக்கு மருந்து

பெங்களூருவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பசு கோமியத்தில் நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் உள்ள எலிகளுக்கு வாய்மூலம் உட்கொள்ளும் வகையில் பசு கோமியம் 25 மிலி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவை விரைவில் நோயில் இருந்து விடுபடுவது தெரியவந்தது. ஆயுர்வேத மருத்துவ முறையில் ஏற்கனவே கோமியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோல் நோய், புற்றுநோய், இதய நோய், பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு கோமியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் எடுத்துக் கொள்வோர், அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு ஆளாகின்றனர். பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாக்கவும், கோமியம் உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து, கோமியத்தில் இருந்து பல்வேறு மருந்துகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பசுவின் கோமியமானது மூன்றுவிதமான குறைபாடுகளான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை நீக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களின் உடலில் இந்த மூன்று குணங்களும் அதிகரிக்காமல் சமநிலையில் வைக்கிறது. பசுவின் சிறுநீரை உபயோகிப்பதன் மூலம் இருமல், மைக்ரேன் தலைவலி, தைராய்டு, போன்றவை குணமடைவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தோல்நோய்களை குணமாக்கும்

தோல் நோய்களான எக்ஸைமா, அரிப்பு, படை, சொரி போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுவின் கோமியத்தை பூசுவதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவைகளுக்கும் கூட இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

நினைவாற்றல் அதிகரிக்கும்

பசுவின் கோமியமானது உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. டென்சனை நீக்குகிறது. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் இதயம், மூளையின் சக்தியை வலுவாக்குகிறது. அதேபோல் வயதாவதை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.