Friday, December 13, 2013

அகத்தியர் ஏடுகள்-நாடி சோதிடம்

இவற்றில் 12 காண்டங்களும் 4 தனிக்காண்டங்களும் அடக்கம்.
முதலாவது காண்டம் -  வாழ்க்கையின் பொதுப்பலன்களை பொதுவாகக்கூறுவது.
இரண்டாவது காண்டம் - குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் முதலியவை பற்றி கூறுவது.
மூன்றாவது காண்டம் - சகோதரர்கள் தொடர்பான விடயங்களை கூறுவது
நான்காவது காண்டம் - தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு முதலியவற்றையும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றியும் கூறுவது.
ஐந்தாவது காண்டம் - பிள்ளைகள் பற்றி கூறுவது
ஆறாவது காண்டம் - வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, வியாதி, கடன் வழக்கௌ, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் பற்றி கூறுவது.
ஏழாவது காண்டம் - திருமணம் பற்றியும் வாழ்க்கைத்துணைவர் பற்றிய விபரங்களையும் கூறுவது.
எட்டாவது காண்டம் - உயிர்வாழும் காலம், உயிராபத்துக்கள் பற்றி கூறுவது
ஒன்பதாவது காண்டம் - தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுவது
பத்தாவது காண்டம் - தொழில்பற்றி கூறுவது
பதினோராவது காண்டம் - இலாபங்கள் தொடர்பாக கூறுவது
பன்னிரண்டாவது காண்டம் - செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் போன்றவை பற்றி கூறுவது.
சாந்தி காண்டம் - ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றுக்கான பரிகாரங்கள் பற்றி கூறுவது.
தீட்சை காண்டம் - மந்திரம் யந்திரம் போன்றவை பற்றியது
ஔஷத காண்டம் - மருத்துவம் பற்றி கூறுவது
திசாபுத்தி காண்டம் - வாழ்க்கையில் நடக்கும் திசைகள்பற்றியும் அவற்றின் விளைவுகளையும் விபரங்களையும் கூறுவது
முதல் காண்டம் முதல் பன்னிரெண்டாவது காண்டம் வரையிலான காண்டங்கள் தரும் விவரங்கள் ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 வது இராசி வரையிலான வீடுகளுக்குண்டன பலாபலன்களை ஒத்திருக்கும்.

No comments:

Post a Comment