நம் உடல் உறுப்புகள் உடலின் இயக்கத்திற்கான வேலைகளை தனித்தனியாக செய்தாலும் கூட அவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டே இயங்குகின்றன... உடல் உறுப்புகளின் பெயர்கள் வேறு வேறாக இருந்தாலும் அவைகள் யாவும் இணைந்து உயிர் காக்கும் கூட்டுமுயற்சியில் தான் இயங்குகின்றன. ஒரு உறுப்பு செயலிழந்தால் அது தொடர்பான மற்ற உறுப்பு களும்..பின் மற்ற உறுப்புகளும் செயலிழக்க தொடங்கும். இதுதான் உடலின் அடிப்படை தத்துவம்.
சிகரெட் அட்டையில் எழுதி இருக்கும் தார், நிக்கோடின், மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுப்பொருட்கள் சுவாச மண்டலத்தின் வழியாக நுரையீரலில் படிந்து கேன்சர் உள்ளிட்ட பல வியாதிகளை அள்ளிக்கொடுத்தாலும்.. அவைகளோடு மட்டும் விட்டு விடாமல் இன்னும் பற்பல சிறப்பு பரிசுகளையும் போனஸாக தருகிறது....
இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், காச நோய், பக்கவாதம் (ஸ்ட்ரோக்) உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற வியாதிகளுடன் இரத்தப்புற்று (Blood Cancer) , நுரையீரல் புற்று (Lung Cancer), கழுத்து புற்று (Neck Cancer), சிறுநீரக மற்றும் சிறு நீர்ப்பை புற்று (Kidney & Urinary Bladder) என வித விதமான புற்றுநோயையும் தருகிறது...
நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் புகைப்பவர்களுக்கு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டு விந்தணுக்களின் வீரியம் குறைதல் , ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் மனோரீதியான பாதிப்புகளையும், தாம்பத்திய வாழ்வில் சிக்கலையும் உருவாக்கி நிம்மதி இழந்து மன உளைச்சலால் தற்கொலை வரை இழுத்து செல்லும்....இது எல்லோருக்குமே தெரிந்த உண்மை... ஆனாலும் புகை பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதாயில்லை...
சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்று வர மிக மிக முக்கிய காரணம் புகைதான்... எல்லாம் தெரிந்தும் பலர் புகைப்பதை கவுரவமாகவும், கம்பீரமாகவும் கருதுகிறார்கள்.... தவணை முறையில் தற்கொலை செய்து கொள்ள எப்படி இவர்கள் சந்தோஷமாய் சம்மதிக்கிறார்கள்..
Thursday, February 20, 2014
புகை நமக்கு பகை – (சிறுநீரகங்கள், மற்றும் சிறு நீர்ப்பை புற்று)
Labels:
Medical hints
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment