Thursday, March 27, 2014

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு

நண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமாkudam ?

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!''.

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.

தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’.

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான் !!!

Tuesday, March 25, 2014

18 சித்தர்கள் பற்றிய குறிப்பு - வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்

18 சித்தர்கள் பற்றிய குறிப்பு

1.அகத்தியர்
பெயர்: அகத்தியர்
பிறந்த தமிழ் மாதம்: மார்கழி
தமிழ் பிறந்த நட்சத்திரம்:ஆயில்யம்
ஆயுள் கால அளவு: 4-யுகம் , 48 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருவனந்தபுரம்

2.பதஞ்சலி
பெயர்: பதஞ்சலி
பிறந்த தமிழ் மாதம்: பங்குனி
தமிழ் பிறந்த நட்சத்திரம்:மூலம்
ஆயுள் கால அளவு: 5-யுகம் 7 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் இராமேஸ்வரம்

3.கமலமுனி
பெயர்:கமலமுனி
பிறந்த தமிழ் மாதம்: வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: பூசம்
ஆயுள் காலம்: 4000 ஆண்டுகள், 48 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருவாரூர்

4.திருமூலர்
பெயர்: திருமூலர்
பிறந்த தமிழ் மாதம்: புரட்டாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: அவிட்டம்
ஆயுள் காலம்: 3000 ஆண்டுகள், 13 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: சிதம்பரம்

5.குதம்பிசித்தர்
பெயர்: குதம்பிசித்தர்
பிறந்த தமிழ் மாதம்: ஆடி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: விசாகம்
ஆயுள் காலம்: 1800 ஆண்டுகள், 16 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :மாயவரம்

6.கோரக்கர்
பெயர்: கோரக்கர்
பிறந்த தமிழ் மாதம்: கார்த்திகை
தமிழ் பிறந்த நட்சத்திரம்: ஆயில்யம்
ஆயுள் கால அளவு: 880 ஆண்டுகள், 11 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்:பேரூர்

7.தன்வந்திரி
பெயர்: தன்வந்திரி
பிறந்த தமிழ் மாதம்: ஐப்பசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்:புனர்பூசம்
ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 32 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: வைதீஸ்வரன் கோயில்

8.சுந்தரனார்
பெயர்: சுந்தரனார்
பிறந்த தமிழ் மாதம்: ஆவணி
தமிழ் பிறந்த நட்சத்திரம்:ரேவதி
ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 28 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: மதுரை

9.கொங்கணர்
பெயர்: கொங்கணர்
பிறந்த தமிழ் மாதம்: சித்திரை
தமிழ் பிறந்த நட்சத்திரம்: உத்திராடம்
ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 16 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருப்பதி

10.சட்டைநாதர் சட்டைமுனி
பெயர்: சட்டைநாதர்
பிறந்த தமிழ் மாதம்: ஆவணி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: மிருகசீரிஷம்
ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 14 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருவரங்கம்

11.வான்மீகர் / வால்மீகி
பெயர்: வான்மீகர் / வால்மீகி
பிறந்த தமிழ் மாதம்: புரட்டாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: அனுஷம்
ஆயுள் கால அளவு: 700 ஆண்டுகள், 32 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: எட்டுகுடி

12.ராமதேவர்
பெயர்: ராமதேவர்
பிறந்த தமிழ் மாதம்: மாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: பூரம்
ஆயுள் கால அளவு: 700 ஆண்டுகள், 06 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம் :அழகர்மலை

13.நந்தீஸ்வரர்
பெயர்: நந்தீஸ்வரர்
பிறந்த தமிழ் மாதம்: வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: விசாகம்
ஆயுள் கால அளவு: 700 ஆண்டுகள் 03 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: காசி

14.இடைக்காடர்
பெயர்: இடைக்காடர்
பிறந்த தமிழ் மாதம்: புரட்டாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: திருவாதிரை
ஆயுள் கால அளவு: 600 ஆண்டுகள், 18 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருவண்ணாமலை

15.மச்சமுனி
பெயர்: மச்சமுனி
பிறந்த தமிழ் மாதம்: ஆடி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: ரோஹிணி
ஆயுள் கால அளவு: 300 ஆண்டுகள், 62 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: திருப்பரங்குன்றம்

16.போகர்
பெயர்:போகர்
பிறந்த தமிழ் மாதம்: வைகாசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்: பரணி
ஆயுள் கால அளவு: 300 ஆண்டுகள், 18 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: பழனி

17.கருவூரர்
பெயர்:கருவூரர்
பிறந்த தமிழ் மாதம்:சித்திரை
தமிழ் பிறந்த நட்சத்திரம்: ஹஸ்தம்
ஆயுள் கால அளவு: 300 ஆண்டுகள், 42 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: கருவூர்

18.பாம்பாட்டிசித்தர்
பெயர்: பாம்பாட்டிசித்தர்
பிறந்த தமிழ் மாதம்: கார்த்திகை
தமிழ் பிறந்த நட்சத்திரம்: மிருகசீரிஷம்
ஆயுள் கால அளவு: 123 ஆண்டுகள், 14 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த இடம்: சங்கரன்கோயில்

காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்கள் -10

தீபாவளியன்று காசிக்குச் செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய தெய்வங்களைக் குறிப்பிடும் ஸ்லோகம் ஒன்று உண்டு.
""விசுவேசம் மாதவம் டுண்டிம்
தண்டபாணிம்ச பைரவம்
வந்தே காசீம் குஹாம் கங்காம்
பவானீம் மணிகர்ணிகாம்''

விஸ்வநாதர்,

பிந்துமாதவர்,

துண்டிவிநாயகர், kaasi

தண்டபாணி,

காலபைரவர்,

காசி மாதா,

வராஹி,

புனித கங்கை,

அன்னபூரணி,

மணிகர்ணிகா தீர்த்தக்கட்டம்

ஆகிய பத்தும் அவசியமாக தரிசிக்கவேண்டியவை. இதில் தண்டபாணி காசியின் காவல் தெய்வம். காலபைரவர் கோயிலில், காசிமாதா சந்நிதி உள்ளது. "குஹாம்' என்றால் வராஹி. காசிமாதா சந்நிதிக்கு மேற்கில் உள்ள குகையையும் குஹாம் என்பர். பத்தையும் ஒரே நாளில் தரிசிப்பது நல்லது. வரிசைப்படி தரிசிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த தரிசனத்துக்கு "நித்திய யாத்திரை' என்று பெயர்.

கருட மகிமை

கருடனின் பார்வைகள் எட்டு வகைப்படும்.

1.விசாலா- மந்தகாசமான பார்வைgarudan
2. கல்யாணி- மான்போல் சுழலும் பர்வை
3. தாரா-குறுக்குப் பார்வை
4. மதுரா-அன்பையும் அருளையும் பொழியும் பார்வை
5. போகவதி-தூக்க கலக்கமான பார்வை
6. அவந்தீ-பக்கமாக பார்ப்பது
7. விஜயா-கணவன் மனைவி இடையே நேசத்தை வளர்க்கக் கூடியது
8. அயோத்தியா-வெற்றியைத் தோற்றுவிப்பது. 

இதனால்தான் வைணவ ஆலயங்களில் கருடனை தரிசித்துக் கொண்டு பெருமாளை சேவிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.

காயத்திரி மந்திர பொருள்

காயத்திரி மந்திரத்தைப் பலர் சொன்னாலும் அதன் பொருள் என்ன என்று பலருக்குத் தெரியாது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதி தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் பின்வருமாறு பாடியுள்ளான். "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" செங்கதிர்த் தேவன் என்பது சூரியனைக் குறிக்கும் செங்கதிர்த்தேவன், காய்கதிர்செல்வன், வெய்யோன், ஞாயிறு, செஞ்சுடரோன், கதிரவன் என்று சூரியனுக்கு பல பெயர்கள் உள்ளன. எமது சைவம் சுட்டுகின்ற சூரியன்கள் பல. 1. பௌதிக சூரியன்: ஒன்று எமது பூமிக்கு ஒளி கொடுக்கும் எரிகோளமான சூரியன். கிரகங்கள் எல்லாம் இந்த சூரியனைத் தான் நீள் வட்டப் பாதையில் வலம் வருகின்றன. இது பௌதிக சூரியன்; இதற்கு உயிரோ அல்லது உணர்வோ இல்லை. ஆனாலும் இயற்கையில் இறை வெளிப்பட்டு நிற்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர்கள் என்ற அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றாக இந்தப் பௌதிக சூரியனைச் சைவம் கூறுகின்றது.deepam "மண்ணோடு நீர் அனல்காலோடு ஆகாயம் மதிஇரவி எண்ணில் வரும் இயமானன்" - சம்பந்தர் தேவாரம்- “இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமானனாய் எறியும் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி...” -திருநாவுக்கரசர் தேவாரம்- இதே போல வைணவர்களும் சூரியனை விஷ்ணுவின் நவ வெளிப்பாடுகளில் ஒன்றாகக் காண்கின்றார்கள் என்பது பின்வரும் நம்மாழ்வார் திருமொழியில் இருந்து தெரிகின்றது. 'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்' - நம்மாழ்வார் ஒன்பதாம் திருமொழி- 2. சூரிய தேவன்இந்த பௌதிக சூரியனுக்கு அதி தெய்வமாக உள்ள தேவதை சூரிய தேவன். இவனையே சோதிட நூல்கள் நவக்கிரகங்களில் ஒன்றாக மொழிகின்றன. கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவக்கிரகங்களில் உள்ள சூரியன் இவரே. கிரக வழிபாட்டை ஏற்றுப் பலன் தரும் சூரியனும் இவரே. 3. துவாதச ஆதித்தர்கள்: இதைவிட துவாதச ஆதித்யர்கள் என்று பன்னிரு சூரியர்கள் உள்ளார்கள். எமது சூரியக் கிரகத்துக்கும் அதன் அதி தெய்வமான சூரிய தேவனுக்கும் சுழற்சி முறையில் மாதம் ஒருமுறை அதிபதியாக வந்து வழிகாட்டி ஒளி காட்டும் தேவர்கள் இவர்கள். வைகத்தன், விவச்சுதன், மார்த்தாண்டன், பாற்கரன் இரவி, உலோகப்பிரகாசன், உலோகசாட்சி திரிவிக்கிரமன், ஆதித்தன், சமித்திரன், துவட்டா அங்கிசமன் என்ப பன்னிரண்டு ஆதித்தர் என்று பன்னிரண்டு ஆதித்தர்களை திவாகர நிகண்டு கூறுகின்றது. பேரூழிக் காலத்தில் இப்பன்னிரண்டு ஆதித்தர்களும் நெருங்கி வர உலகத்தொகுதியை மூழ்கடித்திருக்கின்ற பிரளய வெள்ளத்தின் மத்தியிலிருந்து அக்கினி உருவாகும். இதையே வடமுகாக்கினி என்று சைவம் கூறுகின்றது. இன்றைய அண்டவியல் விஞ்ஞானமும் அண்டத்தொகுதிகளின் பேரொடுக்கத்தில் (Big Crunch) கோளத்தொகுதிகள் நெருங்கி வரவர அவற்றின் வெம்மை அதிகரித்து அக்கினி பிறக்கும் என்றே கூறுகின்றது. 4. அப்பிராகிருத சூரியன்: இவ்வாறு இந்தப் பிரகிருதியில் உள்ள அண்டத்தொகுதிகளின் கோடிக்கணக்கான சூரியர்களுக்கு ஒளி கொடுக்கும் சூரியனை அப்பிராகிருத சூரியன் என்பர். அப்பிராகிருத சூரியன் என்றால் இந்தப் பௌதிகத்திற்கு அப்பாற்பட்ட சூரியன் என்று பொருள். இந்த அப்பிராகிருத சூரிய மண்டலத்தையே இறப்பின் பின் ஒளிமார்க்கத்தில் செல்லும் உயிர்கள் கடந்து செல்கின்றன. இந்த அப்பிராகிருத சூரியனையே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரும் பாடியுள்ளார். "இருள் அகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான்" -பெரியாழ்வார் திருமொழி 414- இந்த அப்பிராகிருத சூரியனையே சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பர் சுவாமிகளும் பாடியுள்ளார். “அங்கதிரோன் அவனை அண்ணலாக் கருத வேண்டா வெங்கதிரோன் வழியே போவதற்கு அமைந்து கொள்மின் அங்கதிரோன் அவனை உடன் வைத்த ஆதிமூர்த்தி செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத் துறையனாரே” -திருநாவுக்கரசர் தேவாரம்- 5. சிவசூரியன்: அண்ட சராசரங்கள் எங்குமுள்ள பல்லாயிரக் கணக்கான ஒளி முதல்களுக்கு ஒளி கொடுப்பது ஒரே இறைவனே. இதை சிவசூரியன் என்று சைவம் சொல்ல சூரிய நாராயணன் என்று வைணவம் சொல்லுகின்றது. இவ்வாறு சைவர்கள் சிவனை ஒளிமுதல்களுக்கெல்லாம் ஒளிமுதலான சிவசூரியனாக வழிபடுகின்றனர். இதையே சிவஞானசித்தியாரும் பின்வருமாறு கூறும். ”நாயகன் கண் நயப்பால் நாயகி புதைப்ப, எங்கும் பாய் இருள் ஆகிமூட, பரிந்து உலகினுக்கு நெற்றித் தூய நேத்திரத்தினாலே சுடர் ஒளி கொடுத்த பண்பின் தேயம் ஆர் ஒளிகள் எல்லாம் சிவன் உருத் தேசது என்னார்” - சிவஞானசித்தியார் 72 இந்த இறையையே வைஷ்ணவர்கள் சூரிய நாராயணனாக வழிபடுகின்றனர். நமது தினசரி ஆத்மார்த்த சிவபூசை சூரிய பூசையுடன் தொடங்கி சண்டேச பூசையுடன் நிறைவு பெறுகின்றது. இதை சூர்யாதி சண்டாந்த பூசை என்பார்கள். இந்த சூரிய வழிபாடுகள் வெறும் பௌதிக நெருப்புக் கோளமான, உயிரற்ற, உணர்வற்ற, சடமான சூரியனுக்கு அல்ல; இங்கு வெளிப்பட்டு நிற்கும் இறைவனுக்கேயாம். காயத்திரி மந்திரமும் இந்த சூரியனையே துதிக்கின்றது. அப்பர் சுவாமிகளும், நம்மாழ்வாரும் பாடிய சூரியனும் இதுவே. ஆதலால்தான் 'அங்கதிரோன் அவனை அண்ணலாக் கருத வேண்டா' என்று அப்பர் பாடியிருக்கின்றார், காயத்திரி மந்திரத்தின் பொருள் சிவனே என்று சிவனை முழுமுதற் கடவுளென்பதற்கு கூறும் இருபத்திரண்டு காரணங்களில் முதலாவது காரணமாக அப்பைய தீக்ஷிதர் பாடிய சுலோக பஞ்சகம் கூறுகின்றது. இதையே 'உயர் காயத்திரிக்குப் பொருளாகலின்'


Friday, March 21, 2014

சடாரி தத்துவம்

sadaari

பெருமாள் கோவில்களில் சடாரி சாத்துவதும் சிறப்பு. சடாரியின் மேல் இறைவனின் திருவடி பொறிக்கப்பட்டிருக்கும். இதனால் இறைவன் நம்மை ஆள்கிறான் என்ற பவ்யமும் குடிகொள்ளும். அஹங்காரமும் மட்டுப்படும். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர் அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார் என்று நம்பிக்கை. நம்மாழ்வாருக்கும் சடகோபன் என்று பெயர். சடாரிக்கும் சடகோபம் என்று வழங்குகிறார்கள். 'சடை' என்ற தேவையற்ற விஷயங்களை விலக்குவது, தீர்ப்பது என்று பொருள். பெருமாளுக்கு ஆதிசேஷனை பாதரக்ஷையாக பார்ப்பதால் இதை ஆதிசேஷம் என்றும் சொல்வார்கள்.

சடாரியை பற்றி மேலும் கூறும் போது

சடாரி அல்லது சடகோபம்; அதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்க; ஏதோ ஒரு கிரீடம் போல இருக்கும். அதன் மேலே இரு பாதங்கள்! இறைவனின் திருப்பாதங்களை நாம் தேடிப் போகா விட்டாலும் கூட, அவை நம்மைத் தேடி வருகின்றன! நம்மைக் கடைத்தேற்ற! கோவிலுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, இந்த சடாரி கூடவே பயணிக்கும்! அறியாத சீடன், குருவை மட்டும் எப்படித் தனியாக அறிந்து விட முடியும்? அவன் குருவை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை! சீடனை நோக்கிக் குரு தானே வருவார், சீடன் கற்க விழையும் போது! அது போல் ஒரு குரு வருகிறார் நம்மைத் தேடி! நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்! சடாரிக்குப் பெயரும் சடகோபம் தான்! வைணவ மரபில் அவர் தான் ஆதி குரு! அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்! அவரே இறைவனின் சடாரியாக இருந்து, அவன் பாதங்களை, நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து, நம்மை உய்விக்கிறார்! - இதுவே சடாரியின் தத்துவம்! சரி, அதற்கு ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு?

நம்மைச் சிறப்பித்து, நமக்கு்த் தலையில் சூட்டினா, உச்சி குளிர்ந்து விடாதா? வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளே கொஞ்சமாச்சும் புளகாங்கிதம் அடைவோம் அல்லவா? "தலை" மேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறான், "தலை" கால் தெரியலை அப்படி-ன்னு பேச்சு வழக்கில் கூட, எண்சாண் உடம்புக்கு "தலையே" பிரதானம்! "தலை"யாய ஒன்றுன்னு தானே இலக்கியங்களும் சொல்கின்றன! இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!

இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா? இல்லை! - அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு! உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? - இறைவனின் திருப்பாதங்கள் தான்! - எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்! அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!


Monday, March 17, 2014

முளை கட்டிய பயறின் மகத்துவம்

seeds

பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.
இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.
அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.

முருங்கை இலை மற்றும் முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்

பச்சை கீரைகள் எல்லாமே சத்துக்கள் நிறைந்தவைகள் என்றாலும் அவற்றிற்கெல்லாம் மகுடமாய் திகழ்வது முருங்கை கீரை என்றால் மிகையாகாது...
உலகிலேயே அதிக சத்துக்கள் நிறைந்ததும், உடலின் முழு ஆரோக்கியத்தையும் சமன் படுத்தக்கூடியதும், அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாகவும் விளங்க கூடிய முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு கிடைத்த வரம்...drumstick
முருங்கை இலைகளில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். உடல் அழகும் ,பலமும் , தெம்பும் கிடைக்கும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.. தலைவலி, இடுப்பு வலி, வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும். உஷ்ணம் சம்பந்த பட்ட நோய்கள் நீங்கும். சொறி சிரங்கு, பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.
முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கைப் பூ செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கைப் பூவை நாற்பது நாட்கள் உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி சீராகி, இல்லற வாழ்க்கையில் உண்டான இடைஞ்சல்கள் எல்லாம் மருந்து மாத்திரைகளும், பக்கவிளைவுகளும் இல்லாமல் பூரண குணமாகும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
முருங்கை விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையால் வாயுப்பிடிப்பு, மூட்டுவலி குணமாகும்.
கடுமையான இரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி, இரத்தவிருத்தி, தாது விருத்தி செய்யும்.
முருங்கை வேரில் இருந்து எடுக்கப்படும் சாறு காசநோய், கீழ்வாயு, முதுகுவலியை குணமாக்கும்.
இலை, பூ, மரப்பட்டை, வேர் என மொத்த பாகமுமே மனித குலத்தை நோயிலிருந்து மீட்க பயன்படும் முருங்கை.... நமக்கு கிடைத்த வரம் என்று சொல்வது சாலப்பொருந்தும்.

Tuesday, March 11, 2014

கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன

sugar cane

கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!
மஞ்சள் காமாலை:
கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
தொற்றுநோய்கள்:
உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.
சிறுநீரக கற்கள்:
கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.
நீரிழிவுக்கு கரும்பு:
இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.
ஊட்டச்சத்துக்கள்:
கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
சளி, இருமல் மற்றும் தொண்டை வலி:
நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.
புற்றுநோய்:
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
நீர் வறட்சி:
நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.

Monday, March 10, 2014

வெந்நீர் குடிப்பதால் விளையும் நன்மைகள்

எளிதாகக் கிடைக்கும் விஷயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான், 'வெந்நீர்'. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம். அவை இதோ..
* காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
* ஏதாவது எண்ணைப் பல காரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.
* தொடர்ந்து வெந்நீர் குடித்தால், உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.
* மூக்கு அடைப்பால் அவதிப்படுகிறீர்களா? வெந்நீரைப் போன்ற சிறந்த மருத்துவர் ஏது? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு 'ஆவி பிடித்தால்' மூக்கு அடைப்பு, தலைப் பாரம் அகன்றுவிடும்.
* உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத் தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால், பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்துவிடும். மேலும் உடல் வலிக்கும்போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
* அலைந்து திரிந்ததால் பாதங்கள் வலியெடுக்கிறதா? அப்போதும் வெந்நீர் தான் கை கொடுக்கும். பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி, அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போலத் தோன்றினால் வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகி விடும்.
* வீட்டில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள், வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் கைகளை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருங்கள். அதனால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் அகன்று, கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
* வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே 'ஜில்'லென்று ஐஸ் வாட்டர் பருகுவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தலாம். அது நன்கு தாகம் தீர்க்கும்.
* ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக வெந்நீர் பருகுவது நல்லது. அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால் அது அந்த நேரத்தில் இதமாக இருப்பதோடு, விரைவாக இயல்பு நிலை ஏற்படும். இப்படி வெந்நீரின் நன்மைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். வெந்நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது என்றும் நன்மை தரும்.

Sunday, March 2, 2014

நம் உடலுக்கும் கால அட்டவணை!!!

இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை:

 

3 AM – 5 AM

நுரையீரல்

தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

5 AM – 7 AM

பெருங்குடல்

காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது

7 AM – 9 AM

வயிரு

சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

9 AM – 11 AM

மண்ணீரல்

வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

11 AM – 1 PM

இதயம்

இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்

1 PM – 3 PM

சிறுகுடல்

மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்

3 PM – 5 PM

சிறுநீர்ப் பை

நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்

5 PM – 7 PM

சிறுநீரகங்கள்

தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

7 PM – 9 PM

பெரிகார்டியம்

பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்

9 PM – 11 PM

உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும்

அமைதியாக உறங்கலாம்

11 PM – 1 AM

பித்தப்பை

அவசியம் உறங்க வேண்டும்

1 AM – 3 AM கல்லீரல் ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம்.
கட்டாயம் தூங்க வேண்டும்.

மகாலட்சுமி எங்கே இருப்பாள்?

lakshmi

தேவர்கள் மகாலட்சுமியைக் குறித்து ஜெபம் மற்றும் ஹோமம் செய்தபோது அக்னியில் பிரசன்னமானாள். அப்போது தாயே எங்கு தினமும் வசிப்பீர்கள் என்று கேட்டதற்கு:
1. அதிகாலையில் எழுந்து இறைவன் நாமத்தை உச்சரித்தபடி வணங்குகிற வீட்டிலும்.
2. வீட்டை சுத்தமாக வைத்திருந்து தீபம் ஏற்றும் இடத்திலும்.
3. கணவன் - மனைவியர் ஒற்றுமையாக இருக்கிற வீட்டிலும்.
4. ஆசாரம், தர்மங்களை கடைப்பிடித்துப் பெற்றோருக்கு ஒழுங்காக மரியாதையோடு பணிவிடை செய்யப்படும் வீட்டிலும்.
5. தானியங்களை சிதறாது பயன்படுத்தும் வீட்டிலும்.
தினமும் பசுவை வணங்கும் வீட்டிலும், குபேரனுடன் சேர்ந்தே வாசம் செய்வேன் என்று லட்சுமிதேவி கூறியதாக பிரம்ம வைவர்த்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சிறந்த ஆற்றல், துணிவு, தெய்வ பக்தி புலனடக்கம், தர்ம சிந்தனை, தூய்மை, உழைப்பு, விருந்தோம்பல், பொது சேவை மனப்பான்மை, சுறுசுறுப்பு, கற்பு நெறி நிறைந்த வீட்டிலும் குரு, குலத்தவர், பெற்றோர்களை மதிப்போர் வீட்டிலும் நிரந்தரமாக வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன

கொசு ஒரு பிரச்சனையா? இது 100% வேலை செய்யும்...!

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!...
ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்...!

musquito

இதில் நீங்க எந்த ரகம் ?

foots