Sunday, June 15, 2014

குண்டோதரன் பொம்மை ரகசியம்

pic1

நம் வீடுகளில் குண்டாக இருக்கும் ஒருவரது பொம்மையை வைக்கிறோம். இவர் இருந்தால் வீட்டில் செல்வம் வளரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்த குண்டோதரன் பொம்மை யாருடைய அம்சம் தெரியுமா? சாந்தகுணம் கொண்ட தேவதைகளில் லட்சுமி குபேரர் முதன்மையானவர். இவர் ராவணனின் தம்பி. அசுரனாகப் பிறந்தாலும் சிவபக்தியில் சிறந்தவர். ராஜயோகத்தை அருளும் தனலட்சுமியும், வீரத்தை அருளும் தைரியலட்சுமியும் இவரிடம் நித்யவாசம் செய்கின்றனர். வடக்கு திசைக்குரிய அதிதேவதையாக இருக்கிறார். இவர் குடியிருக்கும் பட்டணம் அழகாபுரம் எனப்படுகிறது. அங்குள்ள அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மெத்தை மீது, மீன் ஆசனத்தில் அமர்ந்திருப்பார். அட்சய திரிதியை நாளில் லட்சுமி குபேரரை வழிபடுவதால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். வெள்ளிக்கிழமையிலும், சுக்கிர ஹோரையிலும் குபேரரை வழிபாடு செய்வது சிறப்பானதாகும். ராஜராஜேஸ்வரிக்குரிய பஞ்சதசீ மந்திரத்தை எப்போதும் ஜபிக்கும் இவர், மகாலட்சுமியின் நிதிகளான சங்கநிதி, பதுமநிதி ஆகியவற்றை நிர்வகிக்கும் தகுதி பெற்றார். இந்த நிதிகளை இரண்டு குண்டோதர வடிவங்களாக்கி பாதுகாத்தார். சங்கநிதி என்பது திருமகளின் அம்சமான வெண்சங்கினையும், பதுமநிதி என்பது திருமகள் வீற்றிருக்கும் செந்தாமரை மலரையும் குறிக்கும். இவ்விருவரின் அருளால் அன்றாட உணவுக்கே அல்லல்படும் ஒருவன் கூட கோடிக்கு அதிபதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்விருவரும் குபேரனுடைய கட்டளைப்படி அவரவர் உழைப்பு, நம்பிக்கை, முன் வினைப்பயன் ஆகியவற்றின் அடிப்படையில் பொருட் செல்வத்தை வழங்குவர். இதனால் தான் இவர்களது அம்சமாக குண்டு பொம்மைகளை வீட்டில் வைக்கிறார்கள். அட்சயதிரிதியை பிரசாதம்..... அட்சய திரிதியை நாளில் தெய்வங்களுக்கு "யவை'' என்ற தானியம் நைவேத்தியம் செய்வது மிகவும் சிறப்பானது. பார்ப்பதற்கு சம்பா கோதுமை போல நீளமாக இருக்கும். பூஜை சாமான்கள் விற்கும் கடைகளில் இது கிடைக்கும். இதை வேக வைத்து படைக்கலாம். குபேர லட்சுமி, லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர் படங்களின் முன்னால் இதை வைக்கலாம். கோதுமை மாவில் செய்த இனிப்பு பலகாரங்களையும் படைக்கலாம். அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலன் உண்டாகும். சிறியவர்கள் பெரியவர்கிளடம் ஆசி பெறுவதற்கு அட்சயதிரிதியை உகந்த நாள்.


Tuesday, June 3, 2014

27 நட்சத்திரங்களும், மரங்களும்

ஒருவர் பிறந்த நாள் தேதி, நேரம், விநாடி அடிப்படையிலும், பஞ்சாங்க அடிப்படையிலும் ஜாதகம் உருவாக்கப்படுகிறது. 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எண், நிறம், கல், அதிதேவதை, பரிகார மரம் என அனைத்தும் உண்டு அதுபோல் மரங்களும் உண்டு

27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள்:

அஸ்வதி - எட்டிமரம்,

பரணி-நெல்லி,

கார்த்திகை - அத்தி,

ரோகிணி - நவ்வல்,

மிருகசீர்ஷம் - கருங்காலி,

திருவாதிரை - செங்கருங்காலி,

புனர்பூசம் - மூங்கில்,

பூசம் - அரசு,

ஆயில்யம் - புன்னை,

மகம் - ஆல்,

பூரம்- பலாசம்,

உத்திரம் - அலரி,

ஹஸ்தம் - அத்தி,

சித்திரை - வில்வம்,

ஸ்வாதி - மருது,

விசாகம் - விளா,

அனுஷம் - மகிழ்,

கேட்டை - பிராய்,

மூலம் - மரா,

பூராடம் - வஞ்சி,

உத்திராடம் - பிலா,

திருவோணம் - எருக்கு,

அவிட்டம் - வன்னி,

சதயம் - கடம்பு,

பூரட்டாதி - தேவா,

உத்திரட்டாதி - வேம்பு,

ரேவதி- இலுப்பை

என 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களாகும்.

அந்தந்த நட்சத்திரகாரர்கள், அவர்களுக்குடைய மரங்களை நட்டால், அவர்களுக்குடைய கர்மவினைகள் தீரும்.ஜாதகத்தில் தோசங்கள் இருந்தால் குறையும்.

பொதுவாகவே மனிதர்களுக்கு சிலரை பிடிக்கும், பலரை பிடிக்காமல் போகும். அவர்கள் செய்யும் செயல்களோ, சேவைகளோ பெரும்பாலும் சுயநலத்தின் வெளிப்பாடு இருக்கும். ஆனால் மரமோ நல்லவர்கள், தீயவர்கள் அனைவருக்கும் காற்றையும், நிழலையும் தருகிறது. பறவைகளுக்கு புகலிடமாக இருக்கிறது. எத்தனையோ மனங்களை குளிரவைக்கிறது. ஆதலால் அந்தந்த நட்சத்திரகார்கள் நடும் மரம் மேலும், மேலும் புண்ணியத்தை கொடுக்கும்