Showing posts with label Food. Show all posts
Showing posts with label Food. Show all posts

Wednesday, April 30, 2014

சரியான நேரத்தில் தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் பலன் ...!

Drinking-water-benefits

1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.

 

2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.

 

3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.

 

4.தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்...!

Tuesday, April 15, 2014

குடலைக் காக்கும் சித்த மருத்துவம்

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஜீரண மண்டலக் கோளாறுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், பரபரப்பு காரணமாக செரிமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. செரிமான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. செரிமானக் கோளாறுகளுக்குச் சித்த மருத்துவத்தில் உள்ள சிகிச்சை குறித்து விரிவான தகவல்கள்.

stomach

செரிமானப் பாதை உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் யாவை?

உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை அழற்சி, இரைப்பைப் புண், சிறுகுடல் புண், குடல்வால் அழற்சி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் செரிமான மண்டல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்.

செரிமான மண்டல நோய்க்கான அறிகுறிகள் என்ன?

வயிறு எரிச்சல், வயிறு வலி, நெஞ்சுக் கரிப்பு, நெஞ்செரிச்சல், குமட்டல், ஏப்பம், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், மந்தம், வாயு உண்டாகுதல், உணவு எதுக்களித்தல், வயிறு புரட்டல், கவ்விப் பிடிப்பது போன்ற வலி உணர்வு, மலச் சிக்கல் அல்லது மலம் சிறிது சிறிதாகக் கழிதல், நீராகவோ அல்லது ரத்தம் சளியுடனோ மலம் கழிதல், வயிறு கடுத்தல், கழிதல் ஆகியன பொதுவான அறிகுறிகள்.

குடல் நோய்கள் ஏற்பட பொதுவான காரணங்கள் என்ன?

உணவு உண்ணும் அளவுக்கேற்ப உழைப்பு இல்லாமை, பதற்றம், பரபரப்பான வாழ்க்கைச் சூழல், முறையற்ற அல்லது மாறுபட்ட உணவுப் பழக்கம், காரம், மசாலாப் பொருட்கள், எண்ணெய் அதிகம் கலந்த உணவுகள், டீ, காபி போன்ற பானங்களை அளவுக்கு அதிகமாகப் பருகுதல், காலம் தவறி நினைத்த நேரத்தில் நினைத்த உணவுகளைச் சாப்பிடுதல், புகை, மதுப் பழக்கம், கோபம், கவலை, மன அமைதியற்ற நிலை ஆகியவை பொதுவான காரணங்கள். நுண்கிருமிகள் மற்றும் வலி நிவாரண மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதாலும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

வாயுத் தொந்தரவு என்றால் என்ன?

சாப்பிடும் உணவுகள் இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிடும். ஜீரணிக்கப்பட்ட உணவின் சாரம் குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு நமக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. ஆனால் இரைப்பை, சிறுகுடல் உறுத்தல் அல்லது அழற்சியின் காரணமாக உணவுப் பொருள்கள் ஜீரணமாவது தாமதமாகிறது. அதிக நேரம் தங்கி இருக்கும் உணவுப் பொருள்களின் மேல் சுரப்பிக்கப்பட்ட அமிலம் மற்றும் நொதிகளின் செயல்பாட்டினால் வாயுவானது இடம் பெயர்ந்து செல்வதால் வலி மாறி மாறி வருகிறது.

வயிற்று வலி வருவது ஏன்?

வயிற்று வலி பெருமபாலும் குடல் புண்ணால்தான் உண்டாகிறது. ஆனால் புண் மட்டுமே காரணம் அல்ல. மேலும் புண் இருக்கும் உறுப்பைப் பொருத்தும் வயிற்று வலி மாறுபடும். இரைப்பையில் புண் இருந்தால் உணவு உட்கொண்டதும் வலி ஏற்படும். சிறுகுடல் முதல் பகுதியில் புண் இருந்தால் உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின் வலி ஏற்படும். உணவு உண்டதும் வலி நீங்கிவிடும். குடல்புண் தவிர செரிமான உறுப்புகளில் அழற்சி குடலில் கிருமிகள் இருப்பது இவற்றாலும் வலி உண்டாகக் கூடும்.

குடல் புண் வருவது எப்படி?

உணவை செரிப்பதற்கான அமிலம் குடலில் சுரக்கிறது. அதனுடன் வேறு சில நொதிப் பொருள்களும் சுரக்கின்றன. காலம் தவறி சாப்பிடுதல் அல்லது அடிக்கடி உணவு சாப்பிடுவதால் அமிலம் மற்றும் நொதிப்பொருள்கள் முறையற்று சுரந்து அவை இரைப்பை அல்லது குடலின் உட்பகுதியை அரித்துப் புண் உண்டாக்கிவிடுகின்றன.

குடல் புண்ணால் ஆபத்தா?

இரைப்பை, சிறுகுடல் இவற்றின் உள்சுவரில் உண்டாகும் புண் மேலும் தீவிரமாகி அந்தச் சுவரையே துளைத்து விடுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் புண்ணிலிருந்து ரத்தம் வடிவதால் அவை ரத்த சோகையை ஏற்படுத்தி உடல் வலிமை குறையும்.

மலச்சிக்கலைத் தவிர்க்க சித்தர்கள் சொன்ன யோசனைகள் என்ன?

மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கமே மலச்சிக்கலுக்குக் காரணம். அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்ற அளவிலே இருக்கவேண்டும் என்று சித்தர்கள் சொல்லிருக்கிறார்கள். உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இல்லாவிட்டால் கண்டிப்பாக மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் நாம் இப்போது சித்தர்கள் கூறிய முறையைக் கடைப்பிடிப்பதில்லை. வயிறு நிறையச் சாப்பிடுகிறோம். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரைகள், பழங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளாததாலும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

சித்த மருத்துவத்தில் குடல் புண்ணுக்கு மருந்து என்ன?

சித்த மருத்துவத்தில் குடல் புண், குன்மம் என்று அழைக்கப்படுகிறது. குடல் புண்ணைக் குணப்படுத்த ஏராளமான சித்த மருந்துகள் இருக்கின்றன. திரிபலா சூரணம், திரிபலாக் கற்பம், ஏலாதி சூரணம், நன்னாரி சூரணம், சீரக சூரணம், சீரண சஞ்சீவி சூரணம், தயிர் சுண்டிச் சூரணம், சிருங்கிப் பேராதி சூரணம் ஆகியவை உள்ளன. இது தவிர நன்னாரி லேகியம், இஞ்சி லேகியம், இஞ்சி ரசாயனம், அதிர்ஷட ரசாயனம் போன்ற லேகியங்களும், மிளகு தக்காளி எண்ணெய் போன்ற எண்ணெய்களும், அயச் செந்தூரம், சங்கு பற்பம், சிலாச் சத்து பற்பம் போன்ற பற்ப செந்தூரங்களும் பெரிதும் பயன்படுகின்றன.

குடல் புண் வராமல் தடுக்கச் செய்ய வேண்டியது என்ன?

புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். மூன்று வேளை உணவைச் சரியான கால நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான அளவு சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடவேண்டும். ருசிக்காக அதிகமாகச் சேர்க்கப்படும் காரம் மசாலாப் பொருள்களின் அளவைக் குறைக்கவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து சாப்பிடவேண்டும். கவலை, பரபரப்பு, பதற்றத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். மன அமைதியுடன் எந்நேரமும் இருக்க பழகிக் கொள்ளவேண்டும்.

Monday, March 17, 2014

முளை கட்டிய பயறின் மகத்துவம்

seeds

பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.
இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,
30 கலோரிகள்
3 கிராம் புரதச்சத்து
6 கிராம் கார்போஹைட்ரேட்
2 கிராம் நார்ச்சத்து உள்ளது.
அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.

முருங்கை இலை மற்றும் முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்

பச்சை கீரைகள் எல்லாமே சத்துக்கள் நிறைந்தவைகள் என்றாலும் அவற்றிற்கெல்லாம் மகுடமாய் திகழ்வது முருங்கை கீரை என்றால் மிகையாகாது...
உலகிலேயே அதிக சத்துக்கள் நிறைந்ததும், உடலின் முழு ஆரோக்கியத்தையும் சமன் படுத்தக்கூடியதும், அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாகவும் விளங்க கூடிய முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு கிடைத்த வரம்...drumstick
முருங்கை இலைகளில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். உடல் அழகும் ,பலமும் , தெம்பும் கிடைக்கும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.. தலைவலி, இடுப்பு வலி, வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும். உஷ்ணம் சம்பந்த பட்ட நோய்கள் நீங்கும். சொறி சிரங்கு, பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.
முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கைப் பூ செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கைப் பூவை நாற்பது நாட்கள் உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி சீராகி, இல்லற வாழ்க்கையில் உண்டான இடைஞ்சல்கள் எல்லாம் மருந்து மாத்திரைகளும், பக்கவிளைவுகளும் இல்லாமல் பூரண குணமாகும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
முருங்கை விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையால் வாயுப்பிடிப்பு, மூட்டுவலி குணமாகும்.
கடுமையான இரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி, இரத்தவிருத்தி, தாது விருத்தி செய்யும்.
முருங்கை வேரில் இருந்து எடுக்கப்படும் சாறு காசநோய், கீழ்வாயு, முதுகுவலியை குணமாக்கும்.
இலை, பூ, மரப்பட்டை, வேர் என மொத்த பாகமுமே மனித குலத்தை நோயிலிருந்து மீட்க பயன்படும் முருங்கை.... நமக்கு கிடைத்த வரம் என்று சொல்வது சாலப்பொருந்தும்.

Tuesday, March 11, 2014

கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன

sugar cane

கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!
மஞ்சள் காமாலை:
கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
தொற்றுநோய்கள்:
உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.
சிறுநீரக கற்கள்:
கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.
நீரிழிவுக்கு கரும்பு:
இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.
ஊட்டச்சத்துக்கள்:
கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
சளி, இருமல் மற்றும் தொண்டை வலி:
நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.
புற்றுநோய்:
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
நீர் வறட்சி:
நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.

Thursday, February 20, 2014

சருமத்தை வெள்ளையாக்க உதவும் 13 உணவுகள்

அனைவருக்கும் சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டு மென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிறைய தண்ணீர் குடித்து, நல்ல உடற் பயிற்சியை செய்ய வேண்டும்.
இதனால் தண்ணீரானது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமம் நன்கு பொலிவாக இருக்கும். எனவே சருமம் வெள்ளையாக வேண்டுமென்பதற்காக கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் ஒரு சில சருமத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால், வெள்ளையாக மாறலாம். அதிலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, வைட்டமின் ஏ, சி மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அந்த உணவுகள்:
கேரட் கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் சிறந்தது. எனவே கேரட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெறும்.
பப்பாளி பப்பாளியில் வைட்டமின் சி இருப்பதோடு, வைட்டமின் ஏ, ஈ மற்றும் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்யலாம். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் சரியாகிவிடும்.
தக்காளி இந்த சிவப்பு நிற அழகான காய்கறியில் லைகோபைன் சத்து அதிகம் உள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், சருமம் பொலிவாவதோடு, உடல் எடை குறைந்து, புற்றுநோய் வருவதும் தடைபடும்.
கிவி இந்த சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால் வெண்மையான சருமத்தை பெறலாம். அதுமட்டுமல்லாமல், அதனை முகத்திற்கு தடவும் போது, கரும்புள்ளிகள், வெடிப்புகள் போன்றவை நீங்கிவிடும்.
பீட்ரூட் இந்த காய்கறியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால், இதை சாப்பிடும் போது உடலில் இத்த ஓட்டம் அதிகரித்து, நல்ல அழகான கன்னங்களை பெறலாம். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும். இல்லையெனில் இதனை அரைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக்காக போடலாம்.
பச்சை இலைக் காய்கறிகள் பச்சை இலைக் காய்கறிகள் சருமத்திற்கு மட்டுமின்றி, உடல் முழுவதற்கும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பசலைக் கீரை போன்றவை மிகவும் ஆரோக்கியமானவை.
ஸ்ட்ராபெர்ரி இந்த புளிப்பு சுவையான பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இதனை சாப்பிட்டால், இதன் நிறத்தை பெறலாம்.
சிவப்பு குடைமிளகாய் சிவப்பு காய்கறிகளில் ஒன்றான சிவப்பு குடைமிளகாயில் லைகோபைன் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
தேநீர் தேநீர் வகைகளில் கிரீன் தேநீர்ல் சருமத்திற்கான நன்மைகள் பல அடங்கியுள்ளன. இதனை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள செல்கள் மென்மையாவதோடு, தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
மஞ்சள் நிற குடைமிளகாய் இந்த வகையான குடை மிளகாயில் வைட்டமின் சி இருப்பதோடு, சிலிகா இருப்பதால், இவற்றை அதிகம் உணவில் சேர்க்கும் போது, சருமம் நன்கு பொலிவோடு மின்னும்.
சோயா பொருட்கள் சோயா பொருட்களில் ஜிங்க் மற்றுட் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பொலிவிழந்த சருமமும் பொலிவு பெறும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். உதாரணமாக, சோயா பால் முகப்பருவை சரிசெய்யும்.
ப்ராக்கோலி இந்த சக்தி வாய்ந்த காய்கறியில் சருமத்தை வெள்ளையாக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை இருப்பதால், அவை உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பொலிவாக்குகிறது.
மீன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் வெள்ளையாகி, அழகாகிவிடும். அதுமட்டுமின்றி, இதனை சாப்பிடும் போது, சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை குணப்படுத்தும்.

foods

கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க...!

1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.
4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகkoyyaவாழ்வு பெறலாம்.
5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்ற வற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது.      5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.
8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.
9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.
10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும்கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.

அல்சர் நோயை குணப்படுத்தும் வாழைப்பழம்..!

உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

banana 1. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படாது.
2. உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை கோப்பை ஒலிவ் எண்ணெய் யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள்.
3. தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
4. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

Saturday, February 8, 2014

தயிர் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வாய்ப்பு குறையும்..? ஆய்வாளர்கள் தகவல்...!

நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை 28 சதவிகிதம் குறைக்கும் சக்தி தயிருக்கு உண்டு என்பதை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.curd
லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் முன்னணி விஞ்ஞானியாக செயல்பட்டுவரும் டாக்டர் நிரா பரோஹி, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட பால் புளிப்பு பொருட்களின் (தயிர்) அனைத்து வகைகளும் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட சீஸ் வகைகளும் நீரிழிவு நோய் வருவதற்கான 24 சதவிகித வாய்ப்பைத் தடுக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளார்.
உயர்ரக புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்களுக்கு பால் பொருட்கள் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. ஆனால் கொழுப்பு சத்தும் அதில் நிறைவாக இருப்பதால் உணவு விதிமுறைகள் மக்களை இவற்றைக் குறைவாக உபயோகிக்கும்படி தெரிவிக்கின்றன. ஆயினும் குறைந்த கொழுப்பு கொண்ட மற்ற பால் உற்பத்திப் பொருட்களுடன் 85 சதவிகித அளவு தயாரிக்கப்படும் தயிரினை ஆய்வு செய்யும்போது நீரிழிவினைத் தவிர்ப்பதற்கான அதிக அளவு வாய்ப்பு இதில் தென்பட்டுள்ளது. இந்த சோதனை தனியாரிடத்தில் மேற்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற சிற்றுண்டிகளுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளப்படும் தயிரும் நீரிழிவைக் குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை முடிவுகள் சோதனைகளால் நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும் புளிக்க வைக்கப்பட்ட பால் பொருட்களில் வைட்டமின்-டி, கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளன. மேலும் நொதித்தல் பலனாக உருவாகும் வைட்டமின்-கே, புரோபயாடிக் பாக்டீரியாக்கள் நீரிழிவு நோய்க்கெதிரான நல்ல பலன்களைத் தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் நமது உடலுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுகள் நமக்கு அதிகம் கிடைக்கும்போது தயிர் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் பொருட்கள் நமது உடலுக்கு நன்மை தரும் என்று தெரிவிக்கும் இத்தகைய ஆய்வுகளும் நமது சுகாதாரத்திற்கு உறுதியளிக்ககூடிய ஒன்றாகும் என்று டாக்டர் பரோஹி கூறுகின்றார்.

Tuesday, January 7, 2014

தனியாவின் பயன்கள்- Coriander Seeds

dhaniya

ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் ஒரு மருத்துவச் சோலையாக இருக்க வேண்டும் என்பதே நமது முன்னோர் களின் கனவு. அதனால்தான் உணவே மருந்து என்ற கோட்பாட்டை கடைபிடித்தார்கள். உணவின் மூலமே நோயின் தாக்குதலிலிருந்து விடுபட வைத்தனர். வரும் முன் காப்பதில் நம் முன்னோர்க்கு ஈடு இணை இல்லை. அந்த வகையில் நம் வீட்டு சமையல் அறையிலுள்ள அஞ்சரைப் பெட்டிகளில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும் தனியா என்று அழைக்கப்படும் கொத்தமல்லியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தனியாவின் மருத்துவத் தன்மை தனிச்சிறப்பு வாய்ந்தது. உடலை சமநிலைப்படுத்தும் வாத, பித்த, கபத்தின் நிலைகளை சீர்ப்படுத்துவதில் தனியாவின் பங்கு அதிகம்.
இதனை உருள் அரிசி என்றும் அழைப்பர்.
Tamil - Kothamalli vidhai, Dhaniya
English - Coriander Seeds
Malayalam - Kottam palar
Sanskrit - Dhanyaka
Botanical Name - Coriandrum sativum
இதன் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இது சிறு செடி வகையைச் சார்ந்தது.
சமையலில் தினமும் தனியா சேர்க்காமல் சாப்பிடுபவர்கள் இருக்க முடியாது. மசலா பொடியில் தனியாவையும் சேர்த்து அரைப்பார்கள். இது நறுமணத்தையும் சுவையையும் தருவதோடு சீரண சக்தியையும் தூண்டுகிறது.
சீரண சக்தியை அதிகரிக்க
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றில் உள்ள அபான வாயு சீற்றமாகி மேல் நோக்கி எழும்பி தலைவலியை உண்டாக்கு கிறது. சில சமயங்களில் கீழ்நோக்கி சென்று மூலப்பகுதியைத் தாக்கி புண்களை ஏற்படுத்துகிறது. சீரண சக்தி நன்றாக இருந்தால்தான் மலச்சிக்கல், வயிறு மந்தம் போன்றவை ஏற்படாது. நாம் எத்தகைய கடினமான அதாவது எளிதில் சீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் அதனுடன் மல்லி விதை பொடியையும் சேர்த்துக்கொண்டால் உணவு எளிதில் சீரணமாகும்.
வாய் துர்நாற்றம் நீங்க
பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப் புண்களாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் வீசும். இவர்கள் மல்லி விதையை வாயில் வைத்து மெதுவாக மென்று உமிழ்நீரை இறக்கினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
இதயம் பலப்பட
ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும் இதயம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையை பொறுத்தே உடலின் இரத்த ஓட்டம் சீர்பெறும். இதயம் பலப்பட அடிக்கடி உணவில் மல்லியைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.
புளித்த ஏப்பம் நீங்க
சிலருக்கு சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். சில சமயங்களில் இது புளித்த ஏப்பமாகவும் மாறும். இதனைப் போக்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து வாயில் போட்டு மென்று சாறு இறக்கினால் சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும்.
கண்கள் பலப்பட
கண்கள்தான் உயிரின் பிரதான உறுப்பாகும். கண்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.
ஆனால் இன்று உடலைவிட கண்களுக்கே அதிக வேலை கொடுக்கிறோம். 12 மணி நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்து பின் தொலைக்காட்சி முன் அமர்பவர்களும் உண்டு. கண்கள் சோர்வடையும் போது உடலும், மனமும் எளிதில் சோர்வடையும். இரவு வேலை செய்பவர்களுக்கும், வெப்ப ஒளி உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் கண்கள் எளிதில் பாதிப்படையும். இவர்கள் மல்லி விதையை நீரில் இட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும்.
பித்த தலைவலி நீங்க
பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் மல்லியை அரைத்து பற்றுபோட்டால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.
ஜலதோஷம் பிடித்திருந்தாலும் சிலருக்கு தலைவலி உண்டாகும். இவர்கள் மல்லி விதையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கபால சூலைநீர் நீங்கி தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.
தலைச்சுற்றல் நீங்க
கொத்தமல்லி விதை, சந்தனம், நெல்லி வற்றல் இவற்றை நீரில் நன்றாக ஊறவைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குறையும்.
பித்தம் குறைய
சுக்கு மல்லி இவற்றை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு, ஒரு கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பொடியைப் போட்டு கஷாயம் போல் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து மாலை வேளையில் அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
நாள்பட்ட புண்கள் ஆற
மல்லி விதையை நன்றாக நீர்விட்டு அரைத்து நாள்பட்ட புண்கள் மீது பற்று போட்டால் புண்கள் விரைவில் ஆறும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் --- கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

Wednesday, December 25, 2013

ஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள்..

keerai

நறுந்தாளி நன்முருங்கை தூதுளை பசலை
வாளிளறு கீரை நெய்வார்த் துண்ணில் யாழி என
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம்
பின் வாங்கிக் கேள்
இந்தியாவில் சுகாதாரத் துறை ஆய்வு கணக் கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக் குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
"கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை, இன்றைய கலாச்சார சீரழிவு, மற்றும் fast food எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்மைக் குறைவினால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவகாரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது.
ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழி முறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர். இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது அதில் ஒரு முறைதான் மேலே உள்ள பாடலில் உள்ளது.
நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும்
நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை
அடுத்து தூதுவேளை - பசலை கீரை - அரைக்கீரை
இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே.!

வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும்

 dry fruit  வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறவும் பற்கள் வலுபெறவும் உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். உலர் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கிளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த பலத்தை வாயில் போட்டு சாப்பிடும் போது எலும்பு மஞ்ஜைகள் வலுபெறும். தொண்டை கட்டு ஏற்பட்டவர்கள் பால் காய்ச்சும் போது மிளகுதூள், உலர் திராட்சையை போட்டு பருகலாம். உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம், உலர் திராட்சையையும் சேர்த்து தண்ணீர் விdry grape1ட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும். கர்ப்பிணிபெண்களும் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். தினமும் ஒரு பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து ஒரு மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.

அறுவகைச் சுவை என்ன என்ன??...

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.
இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

Sunday, December 22, 2013

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்!

banana flower

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.
பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.
முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.
மருத்துவப் பயன்கள்:
இரத்தத்தைச் சுத்தப்படுத்த:
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.
மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு:
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
வயிற்றுப்புண் நீங்க:
இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
மூலநோயாளிகளுக்கு:
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மலச்சிக்கலைப் போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
பெண்களுக்கு:
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
வாழைப்பூ கஷாயம்
வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்
இஞ்சி 5 கிராம்
பூண்டு பல் 5
நல்ல மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 5 இணுக்கு
எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.
பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.
கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.
நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

உடலுக்கு வலிவு தரும் வாழைத்தண்டு சூப்

banana soup

உடலுக்கு வலிவு தரும் வாழைத்தண்டு சூப். .
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒரு துண்டு
கொத்தமல்லி – 1/2 கட்டு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.
• வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.
• கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.
• வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும். சிறுநீரகக் கல் கரையும்.

Saturday, December 21, 2013

வெற்றிலை போடுவது ஏன்?

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

vetrilai
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் சரியான காரணமாகும். இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது. இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது, சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது, வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது. இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை. இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

Wednesday, December 18, 2013

கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிக ளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம். kambu

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

* மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர்.

* இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப் புண், வாய்ப்புண் குணமாகும்.

* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவ டையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

கேழ்வரகு - கம்பு கூழ்:

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1/2 கப்
கம்பு மாவு - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* முதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து, புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து, பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பது போல் செய்ய வேண்டும். உப்பு போட வேண்டாம்.

* காலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும்.

* அது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.

* தண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் அடியில் பிடிக்காமலும், கட்டி விழாமலும் கிண்டிவிடவும்.

* சிறிது நேரத்தில் கம்புமாவு பொங்கி வரும்.

* அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிளர வேண்டும்.

* 5 நிமிடம் கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமிடம் வைக்கவும்.

* இப்போது இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.

* விருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ சாப்பிடலாம்.

Tuesday, December 17, 2013

நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்

ஒட்டும் தன்மையற்ற (நான் ஸ்டிக்), சமையல் பாத்திரங் களில் சமைக்கப்படும் உணவை உண்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.non stick vessel
இதுகுறித்து, ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது,
´நான் ஸ்டிக்´ சமையல் பாத்திரங்களில், ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்க, சில வேதிப்பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த வேதிப்பூச்சுகள், விஷத்தன்மை கொண்டவை. இவ்வகை பாத்திரங்களில் உணவு தயாரிக்கும் போது, வேதிப்பூச்சுகள் உணவில் கலந்துவிடுகின்றன.
இதனால், இவ்வகை உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம், மனித உடலில் கேடுகளை விளைவிக்கின்றன. இதனால், ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உண்பவர்களுக்கு, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும், ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அனைவரின் இரத்தத்திலும், வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர், நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதின் மூலம், நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான் ஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பூச்சுகளே, இவ்வகை பாதிப்புகளுக்கு காரணமாய் இருப்பதால், அவற்றில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நினைவாற்றலை அதிகரிக்கும் முட்டை

நினைவாற்றலை அதிகரிக்கும் முட்டை

egg

நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.

முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. நாம் சமைக்கும் முட்டையை பொருத்து கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும். முட்டையில் தைராய்டு ஹோர்மோன் சுரப்பதற்குத் தேவையான அயோடின் உள்ளது.

பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது. காயங்களை குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம் அதிகம் காணப்படுகிறது.

முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது.

இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன.

தினமும் குழந்தைகளுக்கு ஒருமுட்டை கொடுப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கிறது. காலை உணவுடன் முட்டை வழங்குவதால் கவனிக்கும் தன்மை அதிகரிப்பதாகவும், வாசிப்புத் திறன் கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் எடையை சீராக வைத்திருக்கும். எடைக்    குறைவான குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் சத்துக்கள் கூடுவதோடு உடல் எடை அதிகரிக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம். தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டல் கண்பார்வையை தெளிவாக்கும்.

குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் வயதான பின்பு ஏற்படக்கூடிய கார்ட்க்ராக்ட் பிரச்சினையில் இருந்து தப்பலாம். முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து எலும்புவளர்ச்சிக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்பிற்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது. வாரத்திற்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது 44 சதவிகிதம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது.

சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே இதயநோய் அபாயமும் இல்லை.

முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. ஆனால் அதை அளவுடன் சாப்பிட்டால் இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி. சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம்.

1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இது 2 வருட ஆய்வு.

இதைத் தவிர 1986 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் தினமும் முட்டை சாப்பிட்டனர். அவர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது.

அந்த மருத்துவர்களின் கொலஸ்ட்ரால் அளவு கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை. 80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவித்தது.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது.

இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும். நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். மருத்துவர்களின் ஆலோசனை யின்படி வாரம் ஒரிரு முட்டை சாப்பிடலாம்.

Sunday, December 15, 2013

வெள்ளைச் சீனியும் அதன் நச்சுத் தன்மையும் – Sugar & Poistions

sugar

இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவுபடுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. உங்கள் சட்டைக் கொலரொல் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதுகப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்? குடலில் மட்டு மல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது. ஆலைகளில் தயாரான வெள்ளைச் சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.