அனைவருக்கும் சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டு மென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம். இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிறைய தண்ணீர் குடித்து, நல்ல உடற் பயிற்சியை செய்ய வேண்டும்.
இதனால் தண்ணீரானது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமம் நன்கு பொலிவாக இருக்கும். எனவே சருமம் வெள்ளையாக வேண்டுமென்பதற்காக கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் ஒரு சில சருமத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால், வெள்ளையாக மாறலாம். அதிலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, வைட்டமின் ஏ, சி மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அந்த உணவுகள்:
கேரட் கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் சிறந்தது. எனவே கேரட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெறும்.
பப்பாளி பப்பாளியில் வைட்டமின் சி இருப்பதோடு, வைட்டமின் ஏ, ஈ மற்றும் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்யலாம். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் சரியாகிவிடும்.
தக்காளி இந்த சிவப்பு நிற அழகான காய்கறியில் லைகோபைன் சத்து அதிகம் உள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், சருமம் பொலிவாவதோடு, உடல் எடை குறைந்து, புற்றுநோய் வருவதும் தடைபடும்.
கிவி இந்த சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால் வெண்மையான சருமத்தை பெறலாம். அதுமட்டுமல்லாமல், அதனை முகத்திற்கு தடவும் போது, கரும்புள்ளிகள், வெடிப்புகள் போன்றவை நீங்கிவிடும்.
பீட்ரூட் இந்த காய்கறியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால், இதை சாப்பிடும் போது உடலில் இத்த ஓட்டம் அதிகரித்து, நல்ல அழகான கன்னங்களை பெறலாம். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும். இல்லையெனில் இதனை அரைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக்காக போடலாம்.
பச்சை இலைக் காய்கறிகள் பச்சை இலைக் காய்கறிகள் சருமத்திற்கு மட்டுமின்றி, உடல் முழுவதற்கும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பசலைக் கீரை போன்றவை மிகவும் ஆரோக்கியமானவை.
ஸ்ட்ராபெர்ரி இந்த புளிப்பு சுவையான பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இதனை சாப்பிட்டால், இதன் நிறத்தை பெறலாம்.
சிவப்பு குடைமிளகாய் சிவப்பு காய்கறிகளில் ஒன்றான சிவப்பு குடைமிளகாயில் லைகோபைன் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
தேநீர் தேநீர் வகைகளில் கிரீன் தேநீர்ல் சருமத்திற்கான நன்மைகள் பல அடங்கியுள்ளன. இதனை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள செல்கள் மென்மையாவதோடு, தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
மஞ்சள் நிற குடைமிளகாய் இந்த வகையான குடை மிளகாயில் வைட்டமின் சி இருப்பதோடு, சிலிகா இருப்பதால், இவற்றை அதிகம் உணவில் சேர்க்கும் போது, சருமம் நன்கு பொலிவோடு மின்னும்.
சோயா பொருட்கள் சோயா பொருட்களில் ஜிங்க் மற்றுட் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பொலிவிழந்த சருமமும் பொலிவு பெறும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். உதாரணமாக, சோயா பால் முகப்பருவை சரிசெய்யும்.
ப்ராக்கோலி இந்த சக்தி வாய்ந்த காய்கறியில் சருமத்தை வெள்ளையாக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை இருப்பதால், அவை உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பொலிவாக்குகிறது.
மீன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் வெள்ளையாகி, அழகாகிவிடும். அதுமட்டுமின்றி, இதனை சாப்பிடும் போது, சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை குணப்படுத்தும்.
Thursday, February 20, 2014
சருமத்தை வெள்ளையாக்க உதவும் 13 உணவுகள்
கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க...!
1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.
4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்ற வற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.
8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.
9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.
10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும்கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.
அல்சர் நோயை குணப்படுத்தும் வாழைப்பழம்..!
உள் குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
1. வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படாது.
2. உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை கோப்பை ஒலிவ் எண்ணெய் யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள்.
3. தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
4. இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
Sunday, December 22, 2013
வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்!
பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர்.
பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன.
முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.
மருத்துவப் பயன்கள்:
இரத்தத்தைச் சுத்தப்படுத்த:
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.
மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு:
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
வயிற்றுப்புண் நீங்க:
இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
மூலநோயாளிகளுக்கு:
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மலச்சிக்கலைப் போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.
பெண்களுக்கு:
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.
வாழைப்பூ கஷாயம்
வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன்
இஞ்சி 5 கிராம்
பூண்டு பல் 5
நல்ல மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை 1 ஸ்பூன்
கறிவேப்பிலை 5 இணுக்கு
எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.
பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.
கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும்.
நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாமும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.
Sunday, December 15, 2013
மஞ்சள் முள்ளங்கி (Carrot)
ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடு கிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்க ளுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளைவிட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும். மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால், அந்த பருவக் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறுகின்றனர். இந்த கூற்று ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான்.
சரி, இங்கு கேரட்டை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இனிமேல் கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வீர்கள்.
இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆண்கள் அவ்வப்போது இரத்தத்தைத் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இல்லாவிட்டால், தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.
விந்தணுக்களை அதிகரிக்கும் ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.
செரிமானம் கேரட் செரிமானத்திற்கும் உதவும். ஆகவே செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.
வயிற்று கோளாறு கேரட்டை ஆண்களும் சரி, பெண்களும் சரி தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும். அதிலும் வாயுத் தொல்லை இருக்கும் போது, கேரட் சாப்பிட நீங்கும்.
கொலஸ்ட்ரால் ஆண்கள் எப்போதுமே தங்களது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவானது கட்டுப்பாட்டுன் இருக்கும்.
ஆரோக்கியமான கண்கள் கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.
பல் பராமரிப்பு கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வலியுடைய மூட்டு வீக்கம் ஆண்களும் சரி, பெண்களும் சரி, இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வலியுடைய மூட்டு வீக்கம். இத்தகைய மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்.
புற்றுநோயை தடுக்கும் கேரட்டில் உள்ள நன்மைகளில் சிறப்பான ஒன்று தான் புற்றுநோயை தடுக்கும் என்பது. ஆகவே தினமும் கேரட் சாப்பிட்டு புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகியிருங்கள்.
நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும். ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவானதாக மாற்றும்.
நீரிழிவு நீரிழிவு இருக்கும் போது கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இன்சுலினை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
மலச்சிக்கல் குடலியக்கம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு சேரட் சாப்பிட்டு வாருங்கள்.
இரத்த அழுத்தம் கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.
Friday, December 13, 2013
சப்போட்டா பழம்
சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள்
100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சி யமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும்
இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும்,
எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும். சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்கா தவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம். ஒல்லியாக
தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவி புரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த
விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக
பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிர ுக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும்.
காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண் டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும். இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறு களுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது .சப்போட்டா பழச்சாறுடன்,
தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.
Thursday, December 12, 2013
இன்சுலின் சுரக்க ‘வாழைப்பூ’ – Banana Flower for Insulin produce
வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் பயன்படுத்துகிறோம்.
பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.
அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்:
* வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
* பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.
* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.
* மூலநோய் கட்டுக்குள் வரும்.
* வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.
* ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.
* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்.
Wednesday, December 11, 2013
பீட்ரூட் கீரையின் பயன்கள்
அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலும், வடஅமெரிக் காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன.
சுவையான கீரை பீட்ரூட்டுக்கு சுகந்தா என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயிர்களுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.
கரோட்டின் உயிர்சத்து பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் வைட்டமின் ஏ நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும்.
புரதம், தாது உப்புக்கள் பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது. பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.
கண்நோய்கள் குணமாகும் உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது. உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும்.
Tuesday, December 10, 2013
நெல்லிக்கனி,நல்ல கனியாக் கனி
நெல்லிக்கனி,நல்ல கனியாக் கனி நெல்லிக்கனி மரணத்தை விலக்கி வைக்கும் தெரியுமா? நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக் கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்து ணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்பு டனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம். முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற் பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சி யின்மையே. இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில் மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங் கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா யாமலக முண்ணமுறை யால் பொருள் முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும். நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடி களிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு. நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம். சங்க காலம் தொட்டு நெல்லிக் கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர். மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகள வான வைட்டமின் ‘சி’ உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக் காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லி கிராம் வைட்ட மின் ‘சி’, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லி கிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது. நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்: நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப் படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. வாய்ப்புண் தீர நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும். பித்தம் குறைய 15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். இரத்த கொதிப்பு நீங்க நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும். கண் நோய்கள் தீர நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமை யுடன் வாழலாம்.
Sunday, December 8, 2013
நோய் எதிர்பு சக்தி நிறைந்த ஸ்ட்ராபெர்
நோய் எதிர்பு சக்தி நிறைந்த ஸ்ட்ராபெர்ரி தினமும் சத்தான உணவு வகைகளை உட்கொண் டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டியது வராது எனக் கூறுவது உண்டு. ஏனெனில், ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம் (சிஎப்எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது. இதில், ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, சாப்பிடாத எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லா விதமான நோய்களையும் தடுக்கும். தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது. இவ்வாறு சிஎப்எல் விஞ்ஞா னியும், இந்த ஆய்வின் தலைவருமான பம் மஹர் தெரிவித்தார். நோய் எதிர்பு சக்தி நிறைந்த ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுங்க நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துகோங்க.
Saturday, December 7, 2013
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு பற்றிய தகவல். சர்க்கரை வள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும்.சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது.. இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது-. சர்க்கரை வள்ளி கிழங்கு சேதமடைந்து இருப்பின் தன்னுடைய பகுதிகளை சரிசெய்து கொள்ள ஆண்டிஆக்சிடெண்ட் திறனை பயன்படுத்தி சரிசெய்து கொள்கிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.
தொப்பையைக் குறைக்கும் அன்னாசிப்பழம்...!
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னா சிக்கு உண்டு. ஓர் அன்னாசிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்பளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும். அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.
மாதுளை பயன்படுத்தும் விதம்
மாதுளை பயன்படுத்தும் விதம்
1. 15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும்.
2. பழச்சாற்றை தேவைக்கேற்ப பருகிவர பாண்டு நீங்கி உடற்பலம் தரும்.
3. இதன் பழஓட்டை நிழலில் காயவைத்து பொடியாக்கி 5-10 கிராம் வீதம் 3 வேளை பொடித்துண்ண பேதி வயிற்றுப்புண் நீங்கும்.
4. மாதுளம் பிஞ்சு தளிர் இவைகளை 20 கிராம் அளவு எடுத்து நன்கு அரைத்து பாலில் மூன்று வேளை வீதம் உண்டுவர மேகநோய், வெள்ளைப்போக்கு நிற்கும்.
5. வாய்ப்புண் குணமாக இதன் தளிரை தேவைக்கேற்ப மென்று தின்ன குணமாகும்.
6. இதன் பழ-ஓட்டைப் பொடித்து அதனுடன் வெந்தயம் பொடி சமபங்கு சேர்த்து 5-8 கிராம் வரை தினமும் 3 வேளை வீதம் உண்டுவர மேகநோய், பாண்டு அடிக்கடி சிறுநீர் செல்லுதல் ஆகியவை குணமாகும்.