Sunday, December 15, 2013

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

sugaf

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ள வர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி -- அரை கிலோ
வெந்தயம் --- கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

Narai     22

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.   இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.   இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.   பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.   வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.   உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.   முசு முசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண் ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.   இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு – 1/2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 3

கறிவேப்பிலை – 2 இணுக்கு

கொத்தமல்லலி – சிறிதளவு

நெல்லி வற்றல் – 10 கிராம்

வெட்டிவேர் – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

Saturday, December 14, 2013

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட சில டிப்ஸ்...!

mosq

தேங்காய் நார்கள்
தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் வீட்டில் பல செயல்களுக்கு பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படி யென்றால் தேங்காய் நார்கள் வீட்டில் பாத்திரங்கள் கழுவ பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால் இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால் அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கடைகளில் கூட கிடைக்கிறது. மாலை நேரத்தில் நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கு புகையை காட்டி, சிறிது நேரம் கழித்து பார்த்தால் கொசுக்களை மாயமாய் மறைந்துவிடும். இயற்கை நார்களில் இருந்து வரும் புகையால் எந்த பாதிப்பும் வராது.
பச்சை கற்பூரம்
கொசுக்கள் அழிவதற்கு முக்கியமாக பொருள் சல்பர், இந்த சல்பர் இருக்கும் எங்கு இருந்தாலும் கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது.
ஒரு பாத்திர தண்ணீரில் பச்சை கற்பூரத்தை போட்டு வைத்தால் அதில் இருந்து வரும் வாசனையால் கொசுக்கள் அருகில் வராது.
கெரோஷின் மற்றும் கற்பூரம்
இந்த இரண்டுமே கொசுக்களை அழிப்பதில் வல்லமைமிக்கது. கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாக்களில் கெராஸினை விட்டு சிறிது கற்பூரத்தையும் கலந்து பிளக்கில் மாட்டி விடவேண்டும். அதனால் ஏற்படும் வாசனையால் கொசுக்கள் வராமல் இருப்பதோடு, உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

நீண்ட ஆயுள் பெற வேண்டுமா? Want live long life?

katralai

1.சோற்றுக் கற்றாழை:

இதற்கு மற்றொரு பெயர் குமரிக் கற்பகம் என்பதாகும். இந்தச் சோற்றுக் கற்றாழையின் மடலை உரித்து உள்ளே உள்ள சோற்றை மட்டும் எடுத்து நன்றாகக் கழுவி அதனுடன் திரிகடுகம் சேர்த்து தினமும் காலையில் ஒரு துண்டு விழுங்கி வந்தால் கண் பார்வை கூர்மை பெறும். நரை, திரை நீங்கி இளமையான தோற்றம் உண்டாகும். திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த கலவையாகும்.

2. மன வேதனை மாறி தெளிவு பெற:

தினமும் காலையில் குளித்து முடித்த பின்னர் சிறிதளவு எள்ளை எடுத்து சாப்பிட்டு வந்தால் மன வேதனை, உடல் வேதனை நீங்கும். எள்ளில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம் போன்ற சத்துப் பொருட்கள் இருக்கின்றன. துருக்கி நாட்டு போர் வீரர்கள் தாங்கள் போருக்குச் செல்லும் முன் எள்ளினை ஒரு பையில் போட்டு தங்களுடன் எடுத்துச் செல்வார்களாம். ஒரு வேளை தாங்கள் போரில் தோற்றுப் போய் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டால் சிறையில் இந்த எள்ளினை சாப்பிடுவார்களாம். இதன் மூலம் அவர்கள் மற்ற கைதிகளை விட வெகு நாட்கள் மன வேதனை, உடல் வேதனை இன்றி உயிருடன் இருந்திருக்கிறார்கள். எள்ளின் பூவினை எடுத்துப் பல்லில் படாமல் விழுங்கினால் ஒரு பூவிற்கு ஒரு வருடம் வீதம் கண் நோய் வராது. தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பிற்கு எள் மிகவும் சிறந்த ஊட்டச் சத்தாகும்.

leafs

3.அருகம்புல்: அருகம்புல்லை எடுத்து வந்து சாறு எடுத்து அதனுடன் 5 மிளகைத் தூள் செய்து அதனுடன் கலந்து இதைக் காலையில் வெறும் வயிற்றில் 100 மி.லி அளவு குடித்து வந்தால் எந்த நோயும் அணுகாது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகும். சனிக்கிழமை முதல் ஆரம்பித்து இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை (ஒன்பது நாட்கள்) வரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவ்வாறாகக் குடித்து வந்தால் ஒரு வருடத்திற்கு விண் கதிர்களால் நமக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படாது. இந்த ஒன்பது நாட்களும் அசைவ உணவு, மது, மாமிசம், புகையிலை, பாக்கு, சிகரெட், போதைப் பொருட்களும், தாம்பத்யமும் கூடாது. மூலிகைச் சாறு குடித்த ஒன்றரை மணி நேரத்திற்கு வேறு உணவு சாப்பிடக் கூடாது.

4. வேம்பு:

நூறு ஆண்டுகள் ஆன வேப்ப மரத்தின் பட்டை, காய், இலை, பூ இவைகளைக் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி இடித்துச் சலித்து பதனம் செய்யவும். இதுவே ‘பராசக்தி காயகல்பம்’ எனப்படும். இந்தப் பொடியை ஒரு குடுவையில் வைத்து, அதனுள் ஒரு வாழைப் பழத்தை வைத்து நாற்பது நாட்கள் கழித்து எடுத்தால் அது காயாக மாறி விடும். அதனை சாப்பிட்டால் தேகம் பலம் பெறுவதோடு நீண்ட ஆயுளும் பெறலாம்.

Friday, December 13, 2013

சப்போட்டா பழம்

sappottaசத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள்
100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சி யமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது.  எனவே தினமும்
இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும்,
எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும். சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்கா தவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம். ஒல்லியாக
தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவி புரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த
விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக
பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிர ுக்கிறதா? கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும்.
காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண் டும்.  வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும். இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறு களுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது .சப்போட்டா பழச்சாறுடன்,
தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

அகத்தியர் ஏடுகள்-நாடி சோதிடம்

இவற்றில் 12 காண்டங்களும் 4 தனிக்காண்டங்களும் அடக்கம்.
முதலாவது காண்டம் -  வாழ்க்கையின் பொதுப்பலன்களை பொதுவாகக்கூறுவது.
இரண்டாவது காண்டம் - குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் முதலியவை பற்றி கூறுவது.
மூன்றாவது காண்டம் - சகோதரர்கள் தொடர்பான விடயங்களை கூறுவது
நான்காவது காண்டம் - தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு முதலியவற்றையும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றியும் கூறுவது.
ஐந்தாவது காண்டம் - பிள்ளைகள் பற்றி கூறுவது
ஆறாவது காண்டம் - வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, வியாதி, கடன் வழக்கௌ, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் பற்றி கூறுவது.
ஏழாவது காண்டம் - திருமணம் பற்றியும் வாழ்க்கைத்துணைவர் பற்றிய விபரங்களையும் கூறுவது.
எட்டாவது காண்டம் - உயிர்வாழும் காலம், உயிராபத்துக்கள் பற்றி கூறுவது
ஒன்பதாவது காண்டம் - தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுவது
பத்தாவது காண்டம் - தொழில்பற்றி கூறுவது
பதினோராவது காண்டம் - இலாபங்கள் தொடர்பாக கூறுவது
பன்னிரண்டாவது காண்டம் - செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் போன்றவை பற்றி கூறுவது.
சாந்தி காண்டம் - ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றுக்கான பரிகாரங்கள் பற்றி கூறுவது.
தீட்சை காண்டம் - மந்திரம் யந்திரம் போன்றவை பற்றியது
ஔஷத காண்டம் - மருத்துவம் பற்றி கூறுவது
திசாபுத்தி காண்டம் - வாழ்க்கையில் நடக்கும் திசைகள்பற்றியும் அவற்றின் விளைவுகளையும் விபரங்களையும் கூறுவது
முதல் காண்டம் முதல் பன்னிரெண்டாவது காண்டம் வரையிலான காண்டங்கள் தரும் விவரங்கள் ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 வது இராசி வரையிலான வீடுகளுக்குண்டன பலாபலன்களை ஒத்திருக்கும்.

64அறுபத்து நாலு கலைகளாவன

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

Thursday, December 12, 2013

இன்சுலின் சுரக்க ‘வாழைப்பூ’ – Banana Flower for Insulin produce

flower

வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் பயன்படுத்துகிறோம்.
பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.
அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்:
* வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
* பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.
* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.
* மூலநோய் கட்டுக்குள் வரும்.
* வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.
* ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.
* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்.

நோய்கள் நீங்க, பில்லி, சூன்யம் அணுகாதிருக்க, வியாபாரத்தில் லாபம் உண்டாக, நவக்கிரக தோஷம் நீங்க

நோய்கள் நீங்க

நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.
இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்.

பில்லி, சூன்யம் அணுகாதிருக்க

பராபிசாரஸமந: து:கபஞ்ஜந காரக
லவஸ்த்ருடி: களா காஷ்டா நிமேஷ: கடிமுஹூர்த்தக:
இதை 108 முறை கூறி விபூதி அணிந்தால், பிறருடைய ஏவல் சூன்யம் முதலியவை நம்மை ஒன்றும் செய்யாது.

வியாபாரத்தில் லாபம் உண்டாக

லக்ஷ லக்ஷ ப்ரதோ லக்ஷ?யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய:
லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத:
இதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.

நவக்கிரக தோஷம் நீங்க

ராஹுர் மந்த: கவிர் ஜீவ: புதோ பௌம ஸஸீ ரவி:
கால: ஸ்ருஷ்டி: ஸ்த்திர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோஜகத்
இதைப் பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

பசு நெய்.. பசுஞ்சாண வரட்டி

cow ghee

கோயில்களில் ஹோமம் செய்யும் போது, பசு நெய்யை ஊற்றுகிறார்கள். நெய் கலந்த அரிசியை இடுவதும் உண்டு. இப்படியெல்லாம், நெய்யை ஊற்றலாமா! நாலு ஏழை பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடாதா என்று வாதம் செய்வோர் உண்டு. ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, ஹோம குண்டங் களில் இடப்படும் பொருட்கள், அக்னி மூலமாக, எந்த தெய்வங்களுக்குரிய மந்திரத்தைச் சொல்கிறோமோ, அந்த தெய்வங்களையோ, தேவர்களையோ அடையும் என்று சொல்கிறது.
அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா?
பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, சுற்றுச்சூழல் தூய்மையடைகிறது. காற்றிலுள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் இடும்போது, அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட சில வாயுக்கள் கிளம்பு கின்றன. இவை ரத்த அழுத்தம், தலைவலி, ஆஸ்துமா, குடல்களில் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சக்தியுடை யவை. நரம்பு மண்டலம் வலுவடையும். டென்ஷன் குறையும்.
வீடுகளில் இடமிருந்தால் பசுஞ்சாண வரட்டியையும் எரிக்கப் பயன்படுத்துங்கள். அந்தக்காலத்தில், வீட்டுக்கு வெளியே இருக்கும் பரந்த இடத்தில், பசுஞ்சாணம் சேகரித்து, வரட்டி தட்டி காயவைத்து வெந்நீர் போட, சமைக்க என பயன் படுத்தினார்கள். இந்தச் சாம்பலை செடி, கொடிகளில் தெளித்தால் பூச்சிகள் ஓடிவிடும். பல் தேய்க்க இந்த சாம்பலை பயன்படுத்துவார்கள். தேமல் இருந்து, அதில் பூசினால் குணமானது.
என்னதான் நவீனம் வளர்ந்தாலும், பசுவளர்ப்பை ஊக்கப் படுத்த வேண்டும். சுத்தமான நெய், வரட்டி முதலானவை கிடைக்க வீட்டுக்கு வீடு ஏற்பாடு செய்ய வேண்டும். பசுக்களை தெருக்களில் அலைய விடக்கூடாது. பசு வளர்ப்புக்கென இடம் ஒதுக்க வேண்டும். அருகிலேயே மேய்ச்சலுக்கு பயன்படும் வகையில் புல் வளர்க்க வேண்டும். பசுக்களைப் பாதுகாத்தால், ஆன்மிக ரீதியாக புண்ணியம். அறிவியல் ரீதியாக ஆரோக்கியம்.

ஆண்/பெண் சிசு (குழந்தை) கருத்தரிப்பை தங்களது விருப்பம் போல் தம்பதிகள் முடிவு செய்ய முடியுமா?

ஆண்/பெண் சிசு (குழந்தை) கருத்தரிப்பை தங்களது விருப்பம் போல் தம்பதிகள் முடிவு செய்ய முடியுமா?
முடியும்!
பயிற்சி: கருத்தரிக்கும் நேரத்தில் "ஆணின் மூச்சு வலப்பக்கமாகவும், பெண்ணின் மூச்சு இடப்பக்கமாகவும் ஓடிக்கொண்டிருந்தால்" பிறக்கும் குழந்தை ஆண். அதுவே மாறினால் பெண் குழந்தை.
பயிற்சி :-
வலப்பக்கம் மூச்சு ஓட:
"தரையில் அமர்ந்து கொண்டு வலக்காலை இடக்கால் மேல் போடவும். வலக்கையை வலக்கால் தொடையில் வைக்கவும். இடக்கையை தரையில் ஊன்றிய படி அமரவும். இவ்வாறு தினந்தோறும் பத்து நிமிடம் இருக்கவும்! இப்படிச்செய்தால் மூச்சு வலப்பக்கம் ஓடும். இவ்வாறு 2 - 3 மாதங்கள் பயிற்சி செய்து பழகலாம்."
இடது பக்கம் மூச்சு ஓட:
"தரையில் அமர்ந்து கொண்டு இடக்காலை வலக்கால் மேல் போடவும். இடக்கையை இடக்கால் தொடையில் வைக்கவும். வலக்கையை தரையில் ஊன்றிய படி அமரவும். இவ்வாறு தினந்தோறும் பத்து நிமிடம் இருக்கவும்! இப்படிச்செய்தால் மூச்சு இடப்பக்கம் ஓடும். இவ்வாறு 2 - 3 மாதங்கள் பயிற்சி செய்து பழகலாம்."
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
ஆராச்சி! முயற்சி! வெற்றி!

ஸ்ரீ ரெங்கம் கோவில் – SriRangam Temple / Sri Arangan / Trichy

srirangam

ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை.அதற்கு பதில் கோவில் பணியாளர்களை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோவில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம்பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகு ஊட்டப்படுகிறது.
இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
மூலவர் பெரிய பெருமாள் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் தென்திசை நோக்கி பள்ளி கொண்டு உள்ளார். முதல் சுற்று திருவுண்ணாழி திருச்சுற்று, 2வது சுற்று ராஜமகேந்தின் சுற்று, 3வது சுற்று குலசேகரன் திருச்சுற்று, 4வது சுற்று ஆலிநாடான் திருச்சுற்று, 5வது சுற்று அகளங்கன் திருச்சுற்று, 6வது சுற்று திருவிக்ரமன் திருச்சுற்று(உத்திர வீதி), 7வது சுற்று கலியுகராமன் திருச்சுற்று(சித்திரை வீதிகளில் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் கொண்ட பகுதிகளாக விளங்குகிறது). இந்த ஏழு திருச் சுற்றுக்களையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடையவளஞ்சான் திருச்சுற்று எனப்படும் 8வது சுற்று மதில்சுவர் அமைந்து உள்ளது.
நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி சன்னதிக்கு வடபுர கோபுர வாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு. இவ் விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வர முடியுமாதலால் இதற்கு ஐந்து குழி மூன்று வாசல் என்பது பெயர். இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று இந்த ஐந்து குழிகளிலும் தன்கை விரல்களை வைத்து மூன்று வாசல்கள் வழியாகவும் பார்ப்பாராம்.
கோயிலின் கருவறையின் மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. விமானத்தின் அமைப்பு தாமரையின் இதழ்களில் இருந்து வெளிவரும் நிலையி லுள்ள நான்கு தங்கக்கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் மகரவடிவில் உள்ள பகுதியில் தெற்கில் பரவாசுதேவர், மேற்கில் அச்சுதர், வடக்கில் அனந்தர், கிழக்கில் வேணு கோபாலர் அல்லது கிருஷ்ணகோவிந்தர் ஆகிய திருமாலின் திருஉருவங்கள் அமைக்கப்பெற்றுள்ளன.
ஆண்டுதோறும் துலாமாதத்தில் (ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்த ப்படுகிறது.துலாமாதம் 30நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும்.

Wednesday, December 11, 2013

ஆக்கினை

vethathri

உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே எண்ணிப் பழகிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலையில், மன அலைகள் வினாடிக்கு 14 முதல் 40 வரை (14 to 40 cycles per second) அமைகின்றன. ஆற்றல் முழுவதும் நுணுகி, மனத்தை, மன அலையை, சுழலை அமைதிப்படுத்தும்போது 'பீட்டா அலை' (beta wave) என்று சொல்லக்கூடிய உணர்ச்சி நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்கு வந்துவிட முடியும். உதாரணமாக, ஒருவர் ஒரு நிறுவனத்தின் மானேஜராக இருக்கும் பொழுது அவரது அதிகாரம் அந்த நிறுவனம் முழுவதும் வியாபித்திருக்கிறது; அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பகுதி - அதிகாரியுடைய அதிகாரம் அந்தப் பகுதியோடு முடிகிறது. அந்தப் பகுதியில் பணியாற்றும் ஒரு எழுத்தரின் பொறுப்பு, அவர் பார்க்கும் கோப்புகளோடு நின்றுவிடுகிறது. அதுபோலவே, நம் மனம் எதை எண்ணிப் பழகி இருக்கிறதோ அந்த அலை நீளத்திலேயே இருக்கும். தியானத்தின் போது அதை விடுத்து எல்லா நிலைகளி லேயும் கொண்டு வந்து நாம் இணைப்புக் கொடுத்துப் பழகிக் கொள்கிறோம். 'பீட்டா அலை' (beta wave)யில் இருந்து 'ஆல்பா அலை' (alpha wave)க்கு வருகிறோம்; அதாவது உறக்கத்தில் என்ன நிலை வருமோ, அந்த நிலைக்கு வருகிறோம். ஆனால் உறங்காத விழிப்பு நிலையிலேயே இருக்கிறோம். இதைத் தான் ஆக்கினை நிலை என்று தியானப் பயிற்சியிலே சொல்கிறோம்.
உள்ளுணர்ந்து உயிரைக் கவனிக்கிறபொழுது, மனம் ஒரு பொருளாகவோ, வடிவமாகவோ, குணமாகவோ மாறாது. அப்படி ஒடுங்கி ஒடுங்கி மனம் நுணுகிய நிலையில் இருக்கும்; அது வரையிலும் 'ஆல்பா அலை' (alpha wave) நிலையிலேயே இருக்கும். உறக்க நிலையிலும் மனம் வடிவம் எடுப்பதில்லை, குணமாக இருப்பதில்லை. அதனால், 'ஆல்பா அலை' (alpha wave) உறக்கத்தில் தானாகவே வந்து விடும்.
இத்தகைய அலை நீளத்தை நம்மால் பாதுகாக்க முடியு மானால், நமக்கு எந்த விஷயத்திலும் உணர்ச்சி வயப்பட்ட நிலை வாராது; மிகுந்த பற்றுதலினால், ஆழ்ந்த உணர்ச்சி வயப்படும் நிலை ஏற்படாது.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

பீட்ரூட் கீரையின் பயன்கள்

beetroute

அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலும், வடஅமெரிக் காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன.
சுவையான கீரை பீட்ரூட்டுக்கு சுகந்தா என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயிர்களுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.
கரோட்டின் உயிர்சத்து பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் வைட்டமின் ஏ நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும்.
புரதம், தாது உப்புக்கள் பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது. பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.
கண்நோய்கள் குணமாகும் உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது. உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும்.

பிரம்ம முகூர்த்தம்

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத்தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞா னமும் கூறுகின்றன. வைக றைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந் தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பை யும், உற்சாகத்தையும் கொ டுக்கின்றன. கண்கள் ஆரோ க்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.
சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண் ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்தஅதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள் ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்ப தாகும். உஷத்காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன்உதயமாகிறான்.
இதனாலேயே விடியற் காலை நேரம் உஷத் காலம் எனப்படு கிறது. இந்த தேவதை யின் செழிப்பான கிரணங்கள் விடி யற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடு தல்விசேசமாக சொல் லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகி றது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில்எழுந்திருக்க வேண் டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை.

ருத்ராட்ச மந்திரம் – முகங்களும் – சிறப்புகளும்

மூன்று முக ருத்ராட்ச மந்திரம்
ஓம் க்லீம் நமஹ...
   3face

நிரஞ்சனா

சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்று சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்தில் இருந்தபோது அவன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே ருத்ராட்ச மரமாக தோன்றியது. சிப்பிக்குள் முத்தாக தோன்றும் மழைதுளியை போல, சிவபெருமானின் முத்து முத்தான கண்ணீரால் தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ரனின் அம்சம். ருத்ராட்சத்தை அணிந்தவர்களின் கண்களில் துன்ப கண்ணீர் வருவதில்லை. ஆபத்துகளில் இருந்து நம்மை தடுத்து காப்பதால் இறைவனை நினைத்து நம் கண்களில் வருவது ஆனந்த கண்ணீர்தான். துன்பம் தூர ஒடி விடும். ருத்ராட்சத்தை அணிந்து ருத்ர அம்சமாக இருப்பவர்களின் அருகில் எந்த தீய சக்தியும் நெருங்காது. சூரியனை கண்டு இருள் விலகுவதை போல, ருத்ராட்சத்தை கண்டு துஷ்ட சக்திகள் விலகுகிறது.

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? என்று சிலருக்கு சந்தேகம் இருக்கும். தாராளமாக பெண்கள் ருத்ராட்சத்தை அணியலாம் என்கிறது புராணம். ஆனால் சில நாட்களில் மட்டும் பெண்கள் ருத்ராட்சம் அணிவதை தவிர்க்க வேண்டும். ருத்ராட்சம் அணிந்தால் மேன்மை ஏற்படும். எந்தெந்த முக ருத்ராட்சம் அணிந்தால் என்ன பலன்? என்பதை பார்க்கலாம்.

ருத்ராட்சத்தின் முகத்தை எப்படி கண்டுபிடிப்பது?

சாத்துக்குடி உரித்தால் அதன் மேல் உள்ள கோடுகளைக் கொண்டு அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது போல, ருத்ராட்சத்தின் மேலே உள்ள கோடுகளைக் கொண்டு அந்த ருத்ராட்சம் எத்தனை முகம் கொண்டது என அறியலாம்.ருத்ராட்ச

ஒரு முக ருத்ராட்சம்

சிவபெருமானின் முகம். பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும். சூரியனின ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அமையும்.

இரண்டு முக ருத்ராட்சம்

தேவதேவி ஸ்வரூபம். இது பாவங்களை அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக இருப்பதால், அறிவு திறன், மதிநுட்பம் மேம்படுத்தும். முகம் பொலிவு பெறும். அம்பிகையின் அருள் நிச்சயம்

மூன்று முக ருத்ராட்சம்

அக்னி ஸ்வரூபம். தோஷங்களையும், பாவங்களையும் நெருங்கவிடாமல் அதை எரித்துவிடும் ஆற்றல் கொண்டது. மூன்றாம் எண் குருபகவானின் எண் என்பதால் சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற வழி பிறக்கும். கல்வி சிறப்பு தரும். வித்தைகள் கைக்கூடும்.

நான்குமுக ருத்ராட்சம்

பிரம்மதேவனின் வடிவம். வேதங்கள், புராணங்கள் கற்ற புண்ணிய பலன்களை இரட்டிப்பாக்கும். இது இராகு பகவானின எண் என்பதால், நல்ல செல்வ வளத்தையும், ஜாதகத்தில் இராகு பகவானின் தோஷம் இருந்தாலும் தீரும். நாகதேவதைகளின் அருள் கிடைக்கும்.

ஜந்து முக ருத்ராட்சம்

சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறது. இதற்கு பெயர் காலக்னி. உணவால் ஏற்படும் தோஷத்தை போக்கும். அத்துடன் ஐந்தாம் எண் புதனின் எண்ணாக இருப்பதால், தடைபடும் கல்வி தொடரும். நல்ல ஞானத்தை பெறுவார்கள். கலைதுறையில் முன்னேற வழி பிறக்கும். பலரின் உதவிகள் கிடைக்கும். செயல்கள் வெற்றி அடையும்

ஆறுமுக ருத்ராட்சம்

முருகப்பெருமானின் அம்சம். முருகப்பெருமானின் ஆசியை பெறுவார்கள். விரோதிகள் வீழ்வார்கள். எதிலும் வெற்றி கிட்டும். சொந்த வீடு – மனை வாங்குகிற சிறப்பை தரும். ஆறாம் எண் சுக்கிரனை குறிப்பதால் எதிர்பாரத அதிர்ஷ்டத்தை தரும். ஸ்ரீமகாலஷ்மி யோகம் அமையும்..

ஏழுமுக ருத்ராட்சம்

மன்மத ஸ்வரூபம். தெரிந்தோ தெரியாமல் செய்த முன் ஜென்ம பாவத்தை போக்கும். பாவங்கள் நீங்கினாலே யோகங்கள் தேடி வரும்தானே. இது கேது எண்ணாக இருப்பதால் உடல் பிணி நீங்கும். கல்விதடை அகலும். ஞானம் பிறக்கும்

எட்டு முக ருத்ராட்சம்

விநாயகபெருமானின் சொரூபம். சனிஸ்வரால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றி பெற வழி கிடைக்கும். விநாயகர் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும். எட்டாம் எண் சனி பகவானின் எண்ணாக இருப்பதால், எட்டு முக ருத்ராட்சத்தை அணிந்தவர்களுக்கு தொல்லை தந்தால், தொல்லை தந்தவர்களை சனி பிடிக்கும். எட்டு முக ருத்ராட்சம் அணிந்தவர்ளுக்கு சனிஸ்வர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். ஆனால் நியாய – தர்மபடி நடக்க வேண்டும்.

ஒன்பது முக ருத்ராட்சம்

பைரவ வடிவம். நூறு பிரம்மஹந்தி தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. சிவபெருமானின வாகனம் என்பதால் சிவபெருமானின் ஆசியும், முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். செவ்வாய் பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால், தைரியம் ஏற்படும். பணவரவு பெருகும். இன்னல் இல்லாத வாழ்க்கை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தோஷங்கள் பாவங்கள் தீரும். போலீஸ் – இராணுவத்தில் உயர் பதவி கிடைக்கும்.

பத்து முக ருத்ராட்சம்

விஷ்ணு சொரூபமாக அமைகிறது. இதனால் ஜாதக தோஷங்கள் நீங்கும். தோல் வியாதி தீரும். கண்திருஷ்டி – செய்வினை பாதிப்புகள் நீங்கும். பத்தாம் எண் சூரியனை குறிப்பதால், அரசாங்க பணிகள் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும். கண் நோய் குணமாகும்.

பதினோரு முக ருத்ராட்சம்

ஏகாதச ருத்திர வடிவம். ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தால் என்ன பலனோ, அந்த பலனை கொடுக்கும். கோடி பசு தானம் செய்த புண்ணியமும் கிட்டும். இந்த பதினோரு எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால் அறிவு தெளிவு பெறும். இதை தலையில் சிறிது நேரம் வைத்திருந்தால், புத்தி நன்றாக வேலை செய்யும்.

பன்னிரண்டு முக ருத்ராட்சம்

துவாதச ஆதித்த ஸ்வரூபம். இது பயத்தை போக்கி மன தைரியத்தை கொடுக்கும். புண்ணிய பலனை அள்ளி தரும். பன்னிரெண்டாம் எண் குரு பகவானின் ஆதிக்கம் கொண்டதால், ஆற்றலும், செல்வ வளமும் தந்திடும். திருமண தடை விலகும்.

பதின்மூன்று முக ருத்ராட்சம்

முருகப்பெருமானை பூஜித்தால் என்ன பலனோ அந்த பலனை எளிதாக கொடுக்கும். பெற்றொருக்கு அறியாமல் செய்த பாவத்தை போக்கும். பெற்றொர் மேல் அன்பு ஏற்படும். பதிமூன்றாம் எண் இராகுபகவானை குறிப்பதால் திடீர் யோகத்தையும் ஏற்படுத்தும்

பதினான்கு முக ருத்ராட்சம்

சிவபெருமானாகவே கருதப்படுவார்கள். அதிர்ஷ்டம் தேடி வரும். செல்வந்தர்களாக திகழ்வார்கள். இன்னும் பல நல்ல பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு சுபிக்ஷத்தை தரும் ஆற்றல் கொண்டது. இதில் ஒன்று முக ருத்ராட்சமும், பதினான்கு முக ருத்திராட்சமும் கிடைப்பது அரிது

ருத்ராட்சத்தை எப்படி அணிய வேண்டும்?

ருத்ராட்சத்தை சிகப்பு கயிற்றில் கட்டி கழுத்தில் அணியலாம். அல்லது தங்க சங்கிலியிலும் – வெள்ளி சங்கிலியிலும் கழுத்தில் அணியலாம். ஆனால் கறுப்பு கயிற்றில் கட்டக் கூடாது

ருத்ராட்சத்தின் மேல் பக்க முகம் பிரம்மா. கீழ்ப்புறம் விஷ்ணு. நடுப்பகுதி ருத்திரன் என்கிறது சாஸ்திரம். அதனால் ருத்ராட்சம் அணிந்தால் முப்பெரும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும்.

ருத்ராட்சத்தை நன்றாக கவனித்து தரம் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். முள் இல்லாதவையாக இருக்க வேண்டும். பூச்சி அரித்தவையாக இருக்கக் கூடாது. பிளவும் இருக்கக் கூடாது

முதன் முறையாக ருத்ராட்சம் அணிபவர்கள், சிவபெருமானின் பாதத்தில் வைத்து ஆசி பெற்று அணிந்தால் நன்மை.

ருத்ராட்சம் அணிந்து பூஜை செய்தால் இன்னும் கைமேல் பலன் கிடைக்கும்.

நெல்லிகாய் அளவு கொண்ட ருத்ராட்சம் மிகவும் உயர்ந்த பலனை தரும்.

இலந்தை பழ அளவு ருத்ராட்சம் மத்திமம்.

கடலை அளவுள்ள ருத்ராட்சம் அதமம்.

ருத்ராட்சத்தால் சிவலிங்கத்தை அலங்கரித்தால், அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிட்டும். பித்ருதோஷம் நீங்கும். தலைமுறை தலைமுறைக்கு இன்னல் இல்லா வாழ்க்கை அமையும்.

சிவன் தந்த ருத்ராட்ச்தை அணிபவர்கள் ருத்ர சொரூபமாகவே மாறி விடுகிறார்கள். வேலனுக்கு வேலாயுதம் போல, எந்த ஆபத்தான சமயத்திலும் நம்மை காக்கும்.

Tuesday, December 10, 2013

உடலும் உயரமும்

thirumular

உடலும் உயரமும் ஒவ்வொரு மனிதரும் அவரவர் கையின் அளவுப் படி தொண்ணூற்றாறு அங்குல உயரமே என்பர். (அவரவர் கையின் விரல் பருமன் ஒரு அங்குலம் எனக் கூறப்படும். அங்குலம், சாண், முழம், மார் என்பதும் கையின் அளவைக் கொண்டே கணிக்கப் படும்)  ‘எண் சாண் உடலம்’ என்பதும், ‘எறும்புக்கும் தன் கையால் எட்டு’ என்பதும் உடலின் உயரத்தைக் குறித்தே வழங்கப்படும். “சென்ம சரீ ரந்தொண்ணூற் றாற தென்னச் செப்புமங் குலமவர்கள் கையாலே தான்”150 என்பர், இந்த உயரத்தின் அளவு என்பது எல்லோருக்கும் பொது என்று உரைக்கப்படுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு வரின் உயரமும் ஒத்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்குச் சித்தர்கள் கூறும் முறை அறிவியல் முறைக்கு ஒத்ததாகவே இருக்கும். “சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும் புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல் அக்கிரம் எட்டும் எண்சாண் அது ஆகுமே”151 ஆணும் பெண்ணும் கூடும் போது நாடியில் தோன்றும் சுக்கிலம் சுரோணிதம் என்னும் இரண்டும் கலந்து பெண்ணின் கருப்பையில் கருவாக அமையும். அக்கரு அமையும் வேளையில், பெண் விடுகின்ற மூச்சுக் காற்று, 12 அங்குல கன அளவு உடம்புக்குள் செல்கிறது. அதில் 8 அங்குல கன அளவு மட்டும் பெண்ணின் உடலுக்குள் தங்கிவிடுகிறது. மீதமுள்ள நான்கு அங்குல கன அளவுக் காற்று வெளியே வந்துவிடுகிறது. உடம்பில் சேர்ந்த 8 அங்குல கன அளவு காற்று, கருவாக அமைந்த குழந்தையின் உடலாக அமைந்து எட்டுச் சாண் என்ற அளவை அமைக்கிறது என்பது திருமூலர் கண்டறிந்த உயிரியல் முறையாகும்.

உங்களின் ஆழ்மன பிராத்தனை வீண் போகாது

meditation

உங்களின் ஆழ்மன பிராத்தனை வீண் போகாது பிரார்த்தனையின் நோக்கம் என்ன? எப்படிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்? யாருக்காகச் செய்ய வேண்டும்? இது பற்றி ஆங்கில தத்துவ மேதையும் ஆன்மிகக் கருத்துகளை அழகாக அளித்தவருமான டாக்டர் நார்மன் வின்சென்ட் பீல் பின்வருமாறு கூறுகிறார்: நாள்தோறும் சில நிமிடங்களைப் பிரார்த்தனைக்காக ஒதுக்கி வையுங்கள். அப்போது ஒன்றும் பேசாதீர்கள். கடவுளைப் பற்றி மட்டும் நினைத்துப் பழகுங்கள். பிறகு இயல்பாக சாதாரண வார்த்தைகளில் உங்கள் மனதில் இருப்பதைக் கடவுளிடம் சொல்லுங்கள். பஸ்ஸில் பயணம் செய்யும்போதும், அலுவலகங்களில் வேலை செய்து கொண்டி ருக்கும் போதும் கடவுள் உங்கள் எதிரே உட்கார்ந்திருப் பதாகப் பாவனை செய்து கொண்டு குட்டிப் பிரார்த்தனை களை அடிக்கடி செய்யுங்கள். எப்போதும் "அது வேண்டும் இது வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். கடவுள் ஏற்கெனவே கொடுத்ததற்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்குப் பிரியமானவர்களுக்குக் கடவுளின் அன்பையும், பாதுகாப்பையும் சம்பாதித்துத் தரும் என்று உறுதியாக நம்புங்கள். பிரார்த்தனையின்போது கசப்புணர்ச்சியும், பகைமை உணர்ச்சியும் மனதில் தலைதூக்க இடம் கொடுக்காதீர்கள். கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள். ஆனால், அவர் கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள். நீங்கள் கேட்டவற்றைவிட அவர் கொடுத் ததும், கொடுப்பதும் எப்போதும் சிறந்ததாகவே இருக்கும். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இயன்றதைச் செய்யுங்கள். பலன் தருவதும் தராததும் அவர் விருப்பம். உங்களைப் பிடிக்காதவர்களும், உங்களைச் சரிவர நடத்தா தவர்களும் நலம் பல பெற்று வாழப் பிரார்த்தனை செய் யுங்கள். ஆன்மிக சக்தியின் முதல் விரோதி வெறுப்புணர்ச்சி என்பதை உணருங்கள். யார் யாருடைய நன்மை வேண்டிப் பிரார்த்தனை செய்வது என்று எண்ணிக் கொள்ளுங்கள். எவ்வளவு அதிகமான பேருக்கு - பிரார்த்தனை செய்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக உங்களுக்குப் பலன் கிடைக்கும். நாம் பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும்போது ஆண்டவன் நமக்கு மிகவும் அருகில் வருகிறான் என்பதை உணருங்கள். இது எம்மதத்தவருக்கும் பொருந்தும்.

நெல்லிக்கனி,நல்ல கனியாக் கனி

nelli

நெல்லிக்கனி,நல்ல கனியாக் கனி நெல்லிக்கனி மரணத்தை விலக்கி வைக்கும் தெரியுமா? நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக் கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்து ணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்பு டனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம். முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற் பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சி யின்மையே. இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில் மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங் கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா யாமலக முண்ணமுறை யால் பொருள் முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக பல வரலாற்று நூல்கள் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும். நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடி களிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு. நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது. நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம். சங்க காலம் தொட்டு நெல்லிக் கனி நம் வாழ்வில் கலந்த ஒரு கனி ஆகும். அதியமான் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தில் இருந்து பல புலவர்கள் பலர் நெல்லிக்கனியை பற்றி பாடி உள்ளனர். மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகள வான வைட்டமின் ‘சி’ உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக் காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லி கிராம் வைட்ட மின் ‘சி’, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லி கிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது. நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்: நெல்லிக்கனியின் சிறப்புகளை கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். அதுபோல் இதன் சிறப்பை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப் படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. வாய்ப்புண் தீர நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும். பித்தம் குறைய 15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். இரத்த கொதிப்பு நீங்க நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும். கண் நோய்கள் தீர நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமை யுடன் வாழலாம்.

இஞ்சிப் பால் – Ginger Juice

ginger juice

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித் துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங் கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக் கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.
என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?