Wednesday, December 4, 2013

தினக்கடன்

MAHARISHI

உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய்,
நினைப்பதும், செய்வதும், நித்தியக்கடன்.
கடவுளும் கடமையும்:
கடவுளை உணர்ந்தோர் கடவுளை நாடுவார்
கடவுளை அறிந்தோர் கடமையில் வாழுவார்.
மரணத்திற்கு அஞ்சாத கடமை:
மரணத்தை எதிர்நோக்கப் பிறந்த நாமோ
மதிப்பிலே இன்பதுன்பம் அனுபவித்து
மரணமென்ற இரத்த ஓட்ட நிறுத்தத்தின்பின்
மறந்துவிடுவோம் பின்னர் ஒன்றாய்ப் போவோம்;
மரணத்திற்கிடையே நம்தேவை எல்லாம்
மனித இனக் கூட்டுறவால் கிடைக்கக் கண்டோம்
மரணத்திற் கஞ்சாமல் மறந்திடாமல்
மதி உடலின் இயல்பறிந்து கடமை செய்வோம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment