மார்ச்சால மூலி என்ற இந்த பதிவிலேயே மூலிகையின் விவரங்களின் விவரங்களை முதலில் தெரிவித்த பின்னர் இந்த மூலிகையின் பெயரை குறிப்பிடப் போகிறேன். இதுதானா என்று எண்ணிவிடாதீர்கள். இதன் பெருமையை நானே பல முறை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
இந்த மார்ச்சால மூலிகையை உப்புடன் மட்டும் வைத்து (மை இல்லாமல்) அரைத்து இதே போன்று கன்னத்தில் தடவிய காணொளிக்காட்சிகளை இதோ கீழே கொடுத்துள்ளேன்.இதற்கும் பூச்சிகள் பார்த்து தெரிந்து தெளியுங்கள்.
சுத்தி செய்த பாதரசத்தை மார்ச்சால மூலியை வைத்து ஒரு குகை செய்து அந்தக் குகையை மார்ச்சால மூலியாலேயே மூடி (ஒரு தேங்காய்ப் பிரமாணம் இருக்கும்படி செய்து ஒரு மண்ணால் ஆன அகலில் வைத்து அதே போல ஒரு அகல் வைத்து மூடி ஏழு சீலை மண் செய்து முப்பது விராட்டியில் புடமிட உருகிக் கட்டி ரச மணியாகும்.
முழங்கால் வலிக்கு இந்த மார்ச்சால மூலியை அரைத்து சம அளவு வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு சம அளவு கலந்து போட மூட்டு வலிகள் எல்லாம் பறந்தோடும். இத்துடன் கருப்பட்டியையும் , வசம்பையும் , கரிய போளம் சேர்த்துப் பற்றிடலாம். இது இதன் வேகமான செயல்பாட்டை தொந்தரவில்லாமல் ஊக்குவிக்கும்.
தொண்டைக் கட்டுக்கு மார்ச்சால மூலியின் சாற்றை சுண்ணாம்பு மற்றும் தேன் கலந்து மெலே பற்றாகப் போட உடனே வாய் திறந்து பாடலாம்.
மூலத் தொந்திரவு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த மார்ச்சால மூலிகையின் சமூலத்துடன் அதாவது மொத்தச் செடியை வேருடன் 11 மிளகுடன், அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் மூன்று நாள் உண்ண மூலம் அற்றுப் போகும். இதே மருந்தை பௌத்திரத்திற்கும், கொடி பௌத்திரத்திற்கும் (இது கொடிய பௌத்திரம்) குதம் முழுதும் ஓட்டை, ஓட்டையாக ஆகி அத்துணை ஓட்டைகளிலும் சீழ் ஒழுகும். இதே மருந்தை பத்து நாள் உண்ண மிக நன்றாக குணமாகும்.
படை, பத்து, செம்மேகப்படை, படர் தாமரை, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் பலவற்றிற்கு மேல் மருந்தை உள்ளுக்கு கொடுத்து, மேலுக்கும் தடவ பறந்தோடும்.
மார்ச்சாலம் என்றால் பூனை, மார்ச்சால மூலி என்றால் பூனையின் மூலிகை என்று பொருள். இன்னும் இது மார்ச்சால மோகினி என்றும், பூனை வணங்கி என்றும், குப்பை மேனி என்றும், மேனியிலை என்றும் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது.
மார்ச்சால மூலிகை குப்பை போன்ற மேனியை பொன் மேனியாக்கும், எனவே இதன் பெயர் குப்பை மேனி.
No comments:
Post a Comment